நோயாளிக்கு ஆக்சிஜன் வினியோக குழாயை அடைத்த ஊழியர்: அரசு மருத்துவமனையில் பரபரப்பு!
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு ஆச்சிஜன் வினியோக குழாய்க்கான வால்வை அடைத்த ஊழியர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவடடம் மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார், இவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் ஆக்சிஜன் ஆலையில் பணியாற்றி வந்தார். 2 நாடகளுக்கு முன்பு இவர் பணிநீக் கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சரவணகுமார் இருசக்கர வாகனத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அவர் உள்தோயாளியை பார்க்க செல்கிறேன் என கூறிவிட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்றார். ஆஸ்பத்திரிக்கு பின்புறம் ஆக்சிஜன் ஆலைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக வெளியேறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த என்ஜினியர் கருப்பசாமி ஆக்சிஜன் ஆலை பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு 4.500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிலிண்டர் டேங்க் குழாய வால்வு அடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த வால்வை உடனடியாக திறந்தார். அப்போது அங்கு ஓடி வந்த நார்சுகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் குறைவாக கிடைத்த தாகவும், சிறிது நேரத்தில் சரியாகி விட்டதாகவும் தெரிவித்தனர். உரிய நேரத்தில் ஆக்சிஜன் வினியோக குழாய் வால்வு திறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.