எழுச்சி பெற்ற வடகிழக்குடன் புதிய பாரதம் உதயமாகிறது: மோடி அரசினால் சாத்தியம்!

Update: 2025-05-24 17:35 GMT

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், வடகிழக்கு இந்தியாவின் முன் எப்போதும் இல்லாத வளர்ச்சித் திறனை ஆராயுமாறு, இன்று உலகளாவிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற முன்னேறும் வடகிழக்கு முதலீட்டாளர் உச்சிமாநாட்டில் பேசிய சோனோவால், "புதிய பாரதம், அதன் மையத்தில் ஒரு எழுச்சி பெற்ற வடகிழக்குடன் விடிந்து கொண்டிருக்கிறது" என்று கூறினார்.


"வடகிழக்கு உள்கட்டமைப்பிற்கான மூலதனத்தை வெளிக்கொணர்தல்" என்ற உச்சிமாநாட்டின் கருப்பொருள் சார்ந்த விவாத தலைப்பில் உரையாற்றிய திரு சோனோவால், கடந்த பத்தாண்டுகளில் வடகிழக்குப் பிராந்தியத்தின் மாற்றத்தை எடுத்துரைத்தார், இந்த மறுமலர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் நிலையான தலைமையே காரணம் என்று கூறினார்.

"பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், வடகிழக்கு ஒரு சகாப்தத்தை வரையறுக்கும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தொலைதூரமாகவும், தனிமைப் படுத்தப்பட்டதாகவும் கருதப்பட்டவை இப்போது தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவாயிலாக வேகமாக மாறி வருகின்றன" என்று சோனோவால் கூறினார். "இந்தப் பகுதி, இந்தியாவின் வளர்ச்சிக் கதையின் ஒரு பகுதி மட்டுமல்ல, இப்போது அதில் ஒரு முக்கிய அத்தியாயமாகவும் விளங்குகிறது."

Similar News