இந்தியாவை தாக்க பாகிஸ்தான் பயன்படுத்திய மட்டமாக ட்ரோன்கள்: அம்பலமான சீனா, துருக்கியின் சதிவேலை!

Update: 2025-05-28 15:22 GMT

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் கீழ், இந்தியா, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தாக்கியது. அங்கு உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அதற்கு ஆதாரமாக புகைப்படங்களையும் வெளியிட்டது. இதன் பின்னரும் பாகிஸ்தான் தொடர்ந்து நம் மீது தாக்குதல் நடத்தியதால் இந்தியா பதிலடி கொடுத்து அதன் முக்கிய ராணுவத் தளங்களை அழித்தது. அவர்கள் விமான தளங்கள் நொறுக்கப்பட்ட காட்சியை இந்திய ராணுவம் வெளியிட்டது. அதேநேரம், இந்த போரில், சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் திரைக்குப் பின்னால் இருந்து பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறது. ஆனால் நமது துணிச்சலான முப்படை வீரர்களின் துணையுடன் பாகிஸ்தானின் தீய திட்டத்தையும் முறியடித்துள்ளனர்.

இன்னும் பாகிஸ்தானுக்கு துருக்கியின் முழு ஆதரவு உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவத் தளங்களையும் குறிவைக்க முயன்றது. ஆனால் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் ஒவ்வொரு தாக்குதலையும் முறியடித்தது மட்டுமல்லாமல், பதிலடி கொடுத்து எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவு அமைச்சகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நகரங்களைத் தாக்க துருக்கியால் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தியதாகத் தெரிவித்தது.

இருப்பினும், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த ஆளில்லா விமானங்களை தீபாவளிக்கு வேட்டு வெடிப்பது போல் சுட்டு வீழ்த்தியது. சிதறிய பாகங்களின் ஆரம்ப தடயவியல் ஆய்வில், இந்த ஆளில்லா விமானங்கள் துருக்கியால் தயாரிக்கப்பட்ட 'அசிஸ்கார்ட் சொங்கர்' மாதிரிகள் என்பதும், அவை பொதுவாக கண்காணிப்பு மற்றும் துல்லியமான தாக்குதல்களுக்காகப் பயன்படுத்தப்படுபவை என்பதும் தெரியவந்தது.

பாகிஸ்தானுக்கு துருக்கியுடன் நல்ல உறவு உள்ளது, மேலும் அது ஆயுத விநியோகத்திற்காக இந்த மத்திய கிழக்கு நாட்டைச் சார்ந்துள்ளது. துருக்கி பாகிஸ்தானுக்கு ரகசியமாக ஆயுதங்களை விற்பதன் மூலம் ஆதரவளிப்பதை இது காட்டுகிறது. இதற்கிடையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த பதிலடி நடவடிக்கை சீனாவை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதாகப் பாசாங்கு செய்யும் சீனா, பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து மறைமுகமாக ஆயுதங்களை வழங்கி வருகிறது. சீனாவின் தூண்டுதலின் பேரிலேயே பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்க துணிந்திருக்கலாம் என்றும் வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்திய ராணுவப் படைகள் தங்கள் நடவடிக்கையில் அழித்த பெரும்பாலான ஆயுதங்கள் சீனாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பதும் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம்.

Similar News