பல உயிர்களைப் பலி கொண்ட துயரமான விமான விபத்துக்குப் பின் இன்று பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் சென்றிருந்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்த மோடி, விபத்தில் தப்பிப்பிழைத்த ஒருவர் உட்பட காயமடைந்தவர்களை சந்தித்ததுடன் இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களுக்கு நாட்டின் முழுமையான ஆதரவை உறுதிசெய்தார்.
தற்போது நடைபெற்று வரும் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்ய அகமதாபாத் விமான நிலையத்தில் உயர்நிலை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்திற்கும் பிரதமர் தலைமைதாங்கினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மோடி தனித்தனியாக பதிவிட்டிருப்பதாவது: “அகமதாபாதில் துயரமான விமான விபத்துக்குப்பின் தப்பிப்பிழைத்த ஒருவர் உட்பட காயமடைந்தோரை சந்தித்து, இக்கட்டான இந்தத் தருணத்தில் அவர்களுடனும், அவர்களின் குடும்பத்தினருடனும் நாங்கள் இருக்கிறோம் என்பதை உறுதிசெய்தேன். அவர்கள் விரைந்து குணமடைய ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்திக்கிறது.” “அகமதாபாத் விமானநிலையத்தில் உயர்நிலை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை வகித்தேன்.”