இந்தியாவின் காலத்தால் அழியாத நல்வாழ்வு பாரம்பரியத்தையும், உலகளாவிய நல்வாழ்வுக்கான அதன் உறுதிப்பாட்டையும் கொண்டாடும் வகையில், மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் நாளை மறுநாள் காலை 6:00 மணி முதல் காலை 8:00 மணி வரை, சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டு "ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்ற கருப்பொருளுடன், மனித நலவாழ்வு, சுற்றுச்சூழல் சமநிலை, ஆகியவற்றுக்கு இடையேயான வலுவான தொடர்பை எடுத்துக் காட்டும் நிலையில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உடல், மனம், அமைதி, ஆன்மீக நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் சக்திவாய்ந்த கருவியாக யோகா திகழ்கிறது என்பதை எடுத்துக் காட்டும் வகையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். குதுப்மினார் வளாகத்தில் வரலாற்று பின்னணியில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் நடத்தப்படுவதன் மூலம் நாட்டின் ஆன்மீக மரபுகள் மற்றும் முழு அளவிலான உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.