இந்திய விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் சலுகைகள்: மத்திய வேளாண் அமைச்சர் பெருமிதம்!

Update: 2025-06-26 04:34 GMT

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் நடத்திய கூட்டத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின் பாசிப்பயறு மற்றும் உளுந்து, உத்தரப் பிரதேசத்தின் உளுந்து கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மாநிலத்தின் வேளாண்துறை அமைச்சர்களுடன் கொள்முதல் நிலவரம் குறித்து விவாதித்த அவர், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மாநில அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.


மத்தியப் பிரதேச அரசிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து கோடைகால பாசிப்பயறு மற்றும் உளுந்துக்கு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொள்முதலுக்கான ஒப்புதலை அமைச்சர் வழங்கினார். இதேபோன்று உத்தரப்பிரதேச மாநிலத்திற்கான ஒப்புதலையும் அவர் வழங்கினார். அதிகாரிகளுக்கு உத்தரவிடும் போது விவசாயிகளின் முறையான பதிவுக்கு மிகவும் நவீனமான பயனுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். தேவைபட்டால் கொள்முதல் மையங்களை அதிகரிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். ஒட்டுமொத்த நடைமுறையும் நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும் அவர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மத்தியப் பிரதேச விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஐடல் சிங் கன்சானா, உத்தரப் பிரதேச வேளாண்துறை அமைச்சர் சூரிய பிரதாப் ஷாகி, மத்திய வேளாண்துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News