உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளரும் இந்தியா:வெளியான சர்வதேச ஆய்வறிக்கை!
அமெரிக்காவைச் சேர்ந்த மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடுகளின் பொருளாதாரம் பற்றி வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதாவது அவ்வறிக்கையில் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க அதிக தொகையை செலவிடுகிறது இருப்பினும் சர்வதேச பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே உள்ளது கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு சர்வதேச பொருளாதாரம் முழுமையான மீட்சியை அடையவில்லை
அதே சமயத்தில் இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது அந்த நாட்டின் உள்நாட்டு சந்தை அவுரி விதமான வளர்ச்சியை பெற்று வருவதால் உலக அளவில் அதிகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் எனவும் நடப்பு ஆண்டில் இந்திய நாட்டின் 5.9 சதவிகிதமாக இருக்கும் 2026 ஆம் ஆண்டில் 6.4 சதவிகிதமாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது