அர்ஜென்டினா: பிரதமருக்கு 'கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்' என்ற கௌரவ விருது!
பிரதமர் நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத்தின் தலைவர் ஜார்ஜ் மாக்ரியிடமிருந்து பியூனஸ் அயர்ஸ் நகரத்திற்கான சாவி (கீ டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற கௌரவத்தைப் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "பியூனஸ் அயர்ஸ் நகர நிர்வாகத் தலைவர் ஜார்ஜ் மாக்ரியிடமிருந்து பியூனஸ் அயர்ஸ் நகரத்திற்கான சாவி 'கீ (டூ சிட்டி ஆஃப் பியூனஸ் அயர்ஸ்) என்ற கௌரவத்தைப் பெறுவதில் பெருமைப்படுகிறேன்" என கூறினார்.