உங்களை நோக்கி வரும் கல்லூரி: புதுச்சேரியில் நடந்த மக்கள் தொடர்பு நிகழ்ச்சி!

Update: 2025-07-10 05:30 GMT

எடின்பர்க் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் உடன் இணைந்து ஜிப்மர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு மிக்க மக்கள் தொடர்பு நிகழ்ச்சியை நடத்தியது. எடின்பர்க் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் நடத்திய முதலாவது மக்கள் தொடர்பு நிகழ்ச்சியான இது இந்தியா -பிரிட்டன் இடையே உலகளாவிய அறுவை சிகிச்சை கூட்டாண்மையை, கல்வியை, தொழில்முறை உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

இந்த நிகழ்ச்சி ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, கல்லூரி முதல்வர் டாக்டர் விக்ரம் காடே அகியோரின் தலைமையில் நடைபெற்றது. எடின்பர்க் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்-ன் தனித்துவமான 'உங்களை நோக்கி வரும் கல்லூரி : ஈடுபாடு, வாய்ப்பு, கூட்டு நடவடிக்கை' என்ற மையப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றது.


எடின்பர்க் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் பேராசிரியர் மற்றும் துணைத் தலைவர் டிம் கிரஹாம், பேராசிரியர் மற்றும் செயலாளர் ராபின் பேட்டன், ஆலோசனை குழு உறுப்பினர்கள் செல்லையா செல்வசேகர்,சாய்கிருஷ்ண விட்டல் சர்வதேச அறுவைசிகிச்சைத் தூதர் டாக்டர் ஜே.கே.ஏ ஜமீல் மற்றும் ஜிப்மர் முன்னாள் மாணவர் திரு சஜல்ராய் ஆகியோருடன் ஜிப்மர் பொறுப்பு இயக்குநர் பேராசிரியர் பாவணா படே, ஜிப்மர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் விக்ரம் காடே ஜிப்மர் பொறுப்பு மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் வினோத்குமார், ஜிப்மர் பொறுப்பு ஆராய்ச்சி முதல்வர் பேராசிரியர் காதம்பரி, ஜிப்மர் இணை இயக்குநர் திரு ரங்கபாஷியம் ஜிப்மர் மூத்த நிதி ஆலோசகர் வர்ஷினி, அருண் ஜிப்மர் கல்லூரி பதிவாளர் டாக்டர் ரவிக்குமார் சீட்டோரியா, ஜிப்மர் கல்லூரி தேர்வுகள் இணை முதல்வர் டாக்டர் க்ளாடுவின் இடையே உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடின்பர்க் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் - ஜிப்மர் உடனான கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் கலந்தாலோசிக்கப்பட்டு அதன்மூலம் நீண்டகால மருத்துவ கல்வி கட்டமைப்பு மற்றும் கூட்டு முயற்சி சம்பந்தமான முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும் மருத்துவ பேராசிரியர்களின் தொழில்முறை வளர்ச்சி மற்றும் நெறிபடுத்தும் ஆசிரியர் திட்டங்கள். தொடர் தொழில்முறை வளர்ச்சி பயிற்சி வழிமுறைகள், மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற முயற்சிகள், இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு கல்வி நிகழ்வுகள், அறுவைசிகிச்சை பயற்சி பட்டறைகள் ஆகிய முக்கிய அம்சங்களும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. மேலும் மருத்துவ ஆராய்ச்சியில் கூட்டு ஒத்துழைப்பு, முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இணை மேற்பார்வை மற்றும் இருதரப்பிலும் உள்ள ஆராய்ச்சி கட்டமைப்புகளை பகிர்வது மற்றும் கூட்டாக ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடுவது ஆகிய அம்சங்களும் விவாதிக்கப்பட்டன.

Similar News