இஸ்ரோவின் கனவு திட்டத்தில் புதிய சாதனையை படைத்த இஸ்ரோ:வெற்றி படியில் ககன்யான் திட்டம்!
விண்வெளி நிலையம் அமைத்து அங்கு மனிதர்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ள இஸ்ரோவின் எதிர்கால கனவு திட்டங்களில் ஒன்றாக உள்ள ககன்யான் திட்டத்தின் புதிய மைல்கல்லை இஸ்ரோ எட்டி உள்ளது
அதாவது மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் உந்துவிசை வளாகத்தில் நடைபெற்ற விண்வெளி நிலையம் அமைக்கும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் அடுத்தகட்ட படி வெற்றி பெற்றுள்ளது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ராக்கெட்டின் உந்துவிசை அமைப்பை இரண்டு நிலைகளாக இஸ்ரோ சோதனை செய்துள்ளது
சுமார் 30 நொடிகளில் இருந்து 100 நொடிகள் வரை நீடித்த இந்த சோதனையின் முடிவை கிடைத்த தரவுகளை இஸ்ரோ ஆய்வு மேற்கொண்ட பொழுது உந்துவிசை அமைப்பு இரண்டு நிலை சோதனைகளிலும் வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது