இந்திய மாணவர்களுக்கு கிடைத்த தரமான வாய்ப்பு: ஏற்படுத்திக் கொடுத்த மோடி அரசு!
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலிருந்து தேசிய அளவிலான அறிவியல் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டனர். வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் (Vidyaarthi Vigyaan Manthan (VVM)) எனும் தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வில் பங்கேற்று, தங்களது மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 90 மாணவர்கள், இன்று சி.எஸ்.ஐ.ஆர் – கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்துக்கு (CSIR – SERC) ஒரு நாள் அறிவியல் களப்பயணமாக வந்தனர்.
இந்த பயணத்தின் போது, முனைவர் எஸ்.மகேஸ்வரன், மூத்த முதன்மை விஞ்ஞானி மற்றும் முனைவர் எஸ். சுந்தரகுமார், முதன்மை விஞ்ஞானி ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். அவ்வேளையில் மாணவர்கள், இத்தகைய அறிவியல் களப்பயணங்கள் தங்களுக்குள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறைகளில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன என்றும், பெரும் தூண்டுதலாகவும் அமைகின்றன என்றும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வை வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் – தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், தமிழக ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன் மற்றும் சியாமளா ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.