கோவையில் உமர் பாரூக், ஜனாபர் அலி, சமீனா முபின், முகமது யாசீர், சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிரடி சோதனை : மடிக்கணினி, கைபேசி உள்ளிட்டவை பறிமுதல்
கோவையில் உமர் பாரூக், ஜனாபர் அலி, சமீனா முபின், முகமது யாசீர், சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிரடி சோதனை : மடிக்கணினி, கைபேசி உள்ளிட்டவை பறிமுதல்;
தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்ற சந்தேகத்தை தொடர்ந்து, உக்கடம், கரும்புக்கடை, பிலால்நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெறுகிறது.
உமர் பாரூக், ஜனாபர் அலி, சமீனா முபின், முகமது யாசீர், சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்துகின்றனர்.
5 குழுக்களாக பிரிந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உக்கடம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் பிடித்த என்.ஐ.ஏ அதிகாரிகள், அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்கள் வீடுகளில் இருந்து, மடிக்கணினி, கைபேசி, சிம்கார்ட், பெண்டிரைவ் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கோவை உக்கடம், வின்சென்ட் ரோட்டை சேர்ந்த ஜனாபர் அலி வீட்டில் முதன் முறையாக சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் சிக்கி விசாரணைக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.