பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் 27 ஆம் தேதி 'நிதி ஆயோக்' கூட்டம்!

டெல்லியில் 27- ஆம் தேதி 'நிதி ஆயோக்' கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநில முதல் மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

Update: 2023-05-18 15:00 GMT

மத்திய திட்ட குழுவுக்கு மாற்றாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க கூட்டணி அரசு கொண்டுவந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். துணைத் தலைவராக சுமன் பெரி இருக்கிறார். இதன் ஆட்சி மன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல் மந்திரிகளும் யூனியன் பிரதேசங்களில் துணைநிலை கவர்னர்களும் இடம்பெற்றுள்ளனர். இதன் ஆட்சி மன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் ஏழாம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டு 'நிதி ஆயோக்' ஆட்சி மன்ற குழு கூட்டம் வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல் மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள்.

மாநிலங்கள் தங்கள் நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதே நேரத்தில் மாநிலங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும். 2047 ஆம் ஆண்டுகள் 'வளர்ச்சி அடைந்த இந்தியா' என்ற கனவை நிறைவேற்றுவதற்கு இலக்கவைத்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News