OBC இடஒதுக்கீடு குறித்து பொய்களை பரப்பும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜ.க SG சூர்யா பாய்ச்சல்!

OBC இடஒதுக்கீடு குறித்து பொய்களை பரப்பும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜ.க SG சூர்யா பாய்ச்சல்!

Update: 2020-08-02 10:11 GMT

நியூஸ் 7 தொலைகாட்சி வியூகம் நிகழ்ச்சியில் தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கலந்துக் கொண்டார். இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து நடைபெற்ற இந்த பேட்டி, மருத்துவ படிப்பில் அனைத்து இந்திய கோட்டா சீட்டுகள் குறித்து சென்றது. "தி.மு.க - காங்கிரஸ் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டவர்களான கோட்டாவை மருத்துவ மேல்படிப்பில் ஏன் அமல்படுத்தவில்லை?" என்ற கேள்வியை நெறியாளர் விஜயன் ஆ.ராசாவிடம் எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஆ.ராசா, நீட் தேர்வு வந்ததற்கு பிறகு தான் All India Quota அமலுக்கு வந்துள்ளது என பதில் அளித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க ஊடக செய்தித்தொடர்பாளர் SG சூர்யா, ஆ.ராசா கூறுவது முற்றிலும் தவறான தகவல். 1984-ஆம் ஆண்டில் இருந்தே All India Quota மருத்துவ படிப்புகளில் உள்ளது. ஆனால், நீட்டிற்கு பிறகு தான் All India Quota அமலுக்கு வந்ததாக பொய் சொல்லி இருப்பது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, 4 வருடம் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தவருக்கு இந்த அடிப்படை தகவல் கூட தெரியவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூட ஜீலை 26-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் 1984-ஆம் ஆண்டு முதல் All India Quota அமலில் இருப்பதை கோடிட்டு காட்டியுள்ளார் என மேற்கோள் காட்டியுள்ளார்.

Full View

SG சூர்யா மேலும் குறிப்பிட்டுள்ளது "ஓபிசி இடஒதுக்கீட்டு விவகாரத்தில் தி.மு.க செய்த துரோகங்களை மறைக்கவே ஆ.ராசா இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற பொய்களை கூறி வருகிறாரா? அவரின் பொய்க்கு அறம் என்ற ஒன்றை அவர் பின்பற்றினால் மன்னிப்பு கேட்க வேண்டும்" என காய்ச்சி எடுத்துள்ளார்.

தி.மு.க-வினர் தாங்கள் ஆட்சி செய்து போது மக்களுக்கு எதையுமே செய்திடாமல், ஆட்சியில் இல்லாத போது ஆளும் கட்சிகளின் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து மக்களை திசை திருப்புவது காமராஜர், எம்.ஜி.ஆர் நாட்களில் இருந்து செய்து வரும் பழுத்த அரசியல் சுபாவம் என்று தமிழக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News