இனி ஆன்லைன் விற்பனையில் எந்த நாட்டின் தயாரிப்பு என குறிப்பிட வேண்டும் - ஆன்லைன் நிறுவனங்களுக்கு உத்தரவு.! #Onlineproducts #ModiGovt #BoycottChina

இனி ஆன்லைன் விற்பனையில் எந்த நாட்டின் தயாரிப்பு என குறிப்பிட வேண்டும் - ஆன்லைன் நிறுவனங்களுக்கு உத்தரவு.! #Onlineproducts #ModiGovt #BoycottChina

Update: 2020-07-09 07:59 GMT

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்கள் தயாரிக்கப்படும் நாட்டின் பெயரைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் என மத்திய மோடி அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் தயாரிப்புகளை சமீபமாக தடை செய்து வருவதுடன், உள்நாட்டு பொருள்களை வாங்க மக்களை ஊக்குவிப்பதையடுத்து மத்திய மோடி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் அமேஸான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் DPIIT எனப்படும் இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள் வர்த்தக மேம்பாட்டுத் துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற விபரத்தைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விபரங்கள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

Similar News