புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மியை நிரந்தரமாக அப்புறப்படுத்தும் பணியை துவங்கிய பீட்டா..! #GiveOurLakshmiBack

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மியை நிரந்தரமாக அப்புறப்படுத்தும் பணியை துவங்கிய பீட்டா..! #GiveOurLakshmiBack

Update: 2020-06-29 02:22 GMT

விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு தமிழக கலாச்சாரங்களை மெல்ல மெல்ல அழிக்கும் பணியை பீட்டா செய்து வருகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டை பீட்டா-விடம் இருந்து ஹிந்து தமிழர்கள் மீட்டது உலகம் அறிந்தது. அது போல தற்போது கோவில் யானைகளை பீட்டா-விடம் இருந்து காக்கும் பணியும் தமிழர்களுக்கு வந்துள்ளது போல் தெரிகிறது. 

சில வாரங்களுக்கு முன்பு, மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மியை குரும்பாபேட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் வைத்து 15 நாட்கள் பராமரிக்க வனத்துறை முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதை அறிந்த பாரதீய ஜனதா மற்றும் இந்து முன்னணியினர், யானை தங்கியிருக்கும் பகுதிக்கு சென்று, யானையை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, 2 நாட்கள் கழித்து திட்டமிட்டபடி கோவில் யானை லக்ஷ்மி கோவிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. 

முன்னதாக இது குறித்து கதிர் செய்திகளிடம் பேசியிருந்த புதுச்சேரி பா.ஜ.க பிரமுகர் பி.எஸ்.கணேஷ், கோவில் யானை லக்ஷ்மியை கோவிலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு பின்னணியில் பீட்டா இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். அது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. 

கோவில் யானை லக்ஷ்மியை கோவிலில் இருந்து அப்புறப்படுத்த இணையதளம் மூலம் தனது பிரச்சாரத்தை பீட்டா துவங்கியுள்ளது. கோவில் யானை லக்ஷ்மியை காட்டு பகுதிக்குள் நிரந்தரமாக விட, புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை வலியுறுத்தும் வகையில் இணையதளம் மூலம் மக்களின் ஆதரவை பெற முடிவு செய்துள்ளது.

பீட்டாவின் இந்த நடவடிக்கைக்கு, ஹிந்துக்கள் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள இந்து மக்கள் கட்சி, "இந்தியா முழுவதும் உள்ள ஹிந்துக்கள் ஒன்றிணைந்ததால் தான் ஜல்லிக்கட்டை வெல்ல முடிந்தது", என்று பதிவிட்டுள்ளது. 

கோவில் யானை லக்ஷ்மியை பீட்டாவிடம் இருந்து காப்பாற்ற #GiveOurLakshmiBack என்ற ஹேஷ்டேகில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

Similar News