7 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி - 1 கி.மீ. கூட உருப்படியில்லை : காங்கிரசை நடுநடுங்க விட்ட பா.ஜ.க அமைச்சர்.!

7 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி - 1 கி.மீ. கூட உருப்படியில்லை : காங்கிரசை நடுநடுங்க விட்ட பா.ஜ.க அமைச்சர்.!

Update: 2019-07-13 06:13 GMT

பாராளுமன்ற மாநிலங்களவையில், ரெயில்வே மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்து பேசினார்.


அப்போது பேசிய அவர், ரெயில்வே பட்ஜெட்டை தனியாக சமர்ப்பிக்காமல், பொது பட்ஜெட்டுடன் இணைத்தது தவறான முடிவு என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், மோடி அரசின் இந்த முடிவை அனைத்து தரப்பினரும் பாராட்டுகிறார்கள்.


பொதுவாக, ரெயில்வே பட்ஜெட், முற்றிலும் அரசியல்ரீதியான பட்ஜெட்டாகவே இருந்தது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும், தொகுதி மக்களை கு‌ஷிப்படுத்துவதற்காகவும், நூற்றுக்கணக்கான ரெயில்களும், ரெயில் பாதைகளும் அறிவிக்கப்பட்டன.


இதையும் படிக்க: 6 ஆயிரம் கோடி மிச்சம் – வெயிட்டிங் லிஸ்ட் பிரச்சனைக்கு தீர்வு : இந்திய இரயில்வே கொண்டு வரும் அதிரடி மாற்றம்.!


ஆனால், தேச சேவை அடிப்படையில், தனி ரெயில்வே பட்ஜெட்டை கைவிடும் முடிவை பிரதமர் மோடி எடுத்தார்.


கடந்த 2007-ம் ஆண்டு, சரக்கு ரெயில் பாதை திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடங்கியது. ஆனால், 2014-ம் ஆண்டுவரை 7 ஆண்டுகளில் வெறும் ரூ.9 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஒரு கி.மீ. தூரத்துக்கு கூட தண்டவாள இணைப்பு போடப்படவில்லை.


மோடி அரசு 2014-ம் ஆண்டு பதவி ஏற்ற பிறகு, அப்பணியில் முன்னேற்றம் ஏற்பட்டது. ரூ.39 ஆயிரம் கோடி முதலீடு செய்தோம். 1,900 கி.மீ. தூரத்துக்கு தண்டவாள இணைப்பு போடப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்குள், 2 சரக்கு ரெயில் பாதைகள் தயாராகிவிடும் என்று கூறியுள்ளார்.


Similar News