கொரோனா தடுப்பு பணிகள் பற்றி முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.!

கொரோனா தடுப்பு பணிகள் பற்றி முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.!

Update: 2020-04-20 02:18 GMT

தமிழகத்தில் இதுவரை 1477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகத்தில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றி கேட்டறிந்தார்.

நேற்று இரவு 7.30 மணிக்கு முதல்வரை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார், அப்பொழுது முதலமைச்சர் தமிழகத்தில் மேற்கொண்டுவரும் தடுப்பு பணிகள் குறித்து விளக்கி உள்ளார்.

அதை தொடர்ந்து அதிகம் பேரை பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட்களை வழங்க வேண்டும் என முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் தமிழகத்திற்கு கூடுதலாக ரேபிட் டெஸ்ட் கிட்களை வழங்குவதாக உறுதி அளித்ததாக தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News