எனக்கு இந்து மத ஞானம் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தா மக்கள் வாக்களிக்க போகிறார்கள் ? : காங்கிரஸ் கட்சியை சாடிய பிரதமர் மோடி

எனக்கு இந்து மத ஞானம் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்தா மக்கள் வாக்களிக்க போகிறார்கள் ? : காங்கிரஸ் கட்சியை சாடிய பிரதமர் மோடி

Update: 2018-12-05 17:24 GMT
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சியில் நம்பிக்கையில்லை என குற்றம் சாட்டினார். மோடிக்கு இந்து மதம் பற்றிய ஞானம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்திற்கு, தனக்கு அந்த ஞானம் இருக்கிறதா இல்லையா என்பதற்காகவா மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என கேள்வி எழுப்பினார் பிரதமர். மின்சாரம், நீர், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வைத்துத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். தமக்கு இந்து மதம் பற்றிய முழுமையான ஞானம் இருப்பதாக ஒருபோதும் கூறிக்கொண்டதில்லை என்றும், ராகுல்காந்தி குடும்பத்தார் தான் அப்படிக் கூறிக்கொள்கிறார்கள் எனவும் மோடி குறிப்பிட்டார். தங்கள் மீது சேற்றை வாரி வீசினால் அதிக இடங்களில் தாமரை மலரும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

Similar News