'பர்ஹானா' படத்தால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இப்படி ஒரு சர்ச்சையா?

பர்ஹானா படத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-05-15 03:30 GMT

'பர்ஹானா' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனால் முன்னெச்சரிக்கையாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் வசிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . துரைப்பாக்கத்தில் உள்ள படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் வீட்டின் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News