அபுதாபி அதிர செய்த பிரதமர் மோடியின் பதவியேற்பு - உலகெங்கும் எதிரொலித்த சிம்ம குரல்.!

அபுதாபி அதிர செய்த பிரதமர் மோடியின் பதவியேற்பு - உலகெங்கும் எதிரொலித்த சிம்ம குரல்.!

Update: 2019-05-31 13:19 GMT

பிரதமர் மோடி 2-ம் முறையாக நேற்று பதவியேற்ற நிலையில் இதையொட்டி
அபுதாபியில் உள்ள பிரபல டவரில் மோடியின் படத்தை வைத்து வண்ணமயமான
கொண்டாட்டங்கள் நடந்தன.


நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக
தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க
தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி
வெற்றி பெற்றுள்ளது.


குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில்
மோடிக்கு, குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவிப்
பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அவர்
தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆனார்.


பாரதிய ஜனதாவைச்
சேர்ந்தவர்களுடன் சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 57
பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.  இந்தநிகழ்ச்சியை உலகின் பல
நாடுகளிலும் மக்கள் கொண்டாடினர்.


ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான
அபுதாபியில் உள்ள பிரபலமான மிக உயர்ந்த ஏடிஎன்ஓசி குழு டவரில் பிரதமர்
மோடியின் பிரமாண்ட ஒளிரும் படம் வைக்கப்பட்டது. மேலும் அபுதாபியில்
வசிக்கும் இந்தியர்களும் கொண்டாடினர். இதற்கு அபுதாபி அரசும் அனுமதி வழங்கி
இருந்தது.


அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் செய்யது, பிரதமர்
மோடியுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருபவர். இந்தியாவுக்கு அரசு முறை
பயணம் மேற்கொண்ட அவர் மத்திய கிழக்கு பிரச்சினைகள் தீர இந்தியாவின் உதவியை
கோரி வருபவர். பிரதமர் மோடியுடனான நட்பு உறவு காரணமாக இந்த கொண்டாட்டங்கள்
நடந்ததாக அந்நாட்டுக்கான இந்திய தூதர் நவ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.


Similar News