நாளை ஐ.நா கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.! #PMModiSpeech

நாளை ஐ.நா கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.! #PMModiSpeech

Update: 2020-07-16 02:38 GMT

ஐ.நா.சபை பாதுகாப்பு சபைக்கு 5 தற்காலிக உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக கடந்த மாதம் 17-ந் தேதி நடைபெற்ற தேர்தலில், இந்தியா ஒரு உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டது. இந்த தற்காலிய உறுப்பினர் பதவி 2 ஆண்டுகள் ஆகும்

இந்த நிலையில் ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (எகோசோக்) கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று முக்கிய உரையாற்றுகிறார். நார்வே பிரதமர் எர்னா சொல்பெர்க், ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் ஆகியோரும் பேசுகிறார்கள். கொரோனா பெருந்தொற்றால் சர்வதேச சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படுகிறது. ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் 70-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த ம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இப்போது 75-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் அந்த கவுன்சிலின் கூட்டத்தில் அவர் பேச இருக்கிறார்.

Similar News