கள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டாக்கில் பதிவிட்ட இளைஞர்கள், போலீசார் கைது!

கள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டாக்கில் பதிவிட்ட இளைஞர்கள், போலீசார் கைது!

Update: 2020-04-17 10:04 GMT

ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் கள்ளச்சந்தையில் சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச் சாராய விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் கள்ளச்சாராயம் காய்ச்சி டிக்டாக்கில் பதிவிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

புது காலனியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் வீட்டின் அருகே உள்ள பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி அதை டிக்டாக் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் இந்தப்பதிவு வேகமாக வைரல் ஆகவே போலீசார் கவனத்திற்கு சென்றது இதுகுறித்து விசாரித்த போலீசார் சாராயம் காய்ச்சிய பிரதீப் , விவேக், சரவணன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சமூக வலைத் தளங்களில் உள்ள வீடியோக்களை பார்த்து கள்ளச்சாராயம் செய்வது கற்றுக் கொண்டதாக ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News