குமரி தொகுதியில் ஓயாமல் உழைக்கும் எம்.பி என்ற பெயர் இருந்தும் வெற்றிக்காக போராடும் பொன்.இராதாகிருஷ்ணன்!! நெருக்கடி கொடுக்கும் கிறிஸ்தவ சபைகள்!

குமரி தொகுதியில் ஓயாமல் உழைக்கும் எம்.பி என்ற பெயர் இருந்தும் வெற்றிக்காக போராடும் பொன்.இராதாகிருஷ்ணன்!! நெருக்கடி கொடுக்கும் கிறிஸ்தவ சபைகள்!

Update: 2019-04-16 07:32 GMT

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.இராதாகிருஷ்ணனின் எம்.பி-யின் பணிகள் மற்றும் செயல்பாட்டை ஏகமனதாக அனைத்து மக்களும் பாராட்டுகிறார்கள் என்றாலும் இந்த தேர்தலில் பா.ஜ.க-வின் வெற்றியை கிறிஸ்தவ தேவாலயங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இது அந்த பகுதியில் அவர்கள் காலம் காலமாக செய்யும் வல்லாண்மையாகும். 


இது குறித்து தமிழ் பத்திரிக்கையாளர் மாலன் நாராயணன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர பத்திரிக்கையாளர் சிந்துகுமார் ஆகியோரின் சமூக வலைதள பதிவுகளில் வலுவான பதிவுகளை கீழ் கண்டவாறு இட்டுள்ளனர். 


கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து சாலைகளும் கன்னியாகுமரி தொகுதில் செப்பனிடப்பட்டுள்ளன.  இரண்டு முக்கிய மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மருத்தவமனை சேவைகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. உண்மையில் இதற்காக தொகுதி எம்.பி என்ற முறையில் பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களை நாம் பாராட்டியாக வேண்டும். பதற்றத்துக்குரிய இடமாக இருந்தாலும் கடந்த 5 ஆண்டுகளில் அங்கு எந்த இன மோதலும் இல்லை. இதற்கு முன்பு எவ்வளவோ எம்.பி-க்கள் இருந்திருந்தாலும் பொன்னார் போல அதிக வளர்ச்சி பணிகளை யாரும் முன்னெடுத்ததில்லை. பொன்னாரின் வளர்ச்சிப் பணிகளை தொகுதியில் உள்ள அனைவருமே பாராட்டினாலும், மோடி மீண்டும் பிரதமராக வரக் கூடாது என்பதற்காகவே பொன்னார் தோற்கடிக்கப்பட வேண்டும் என அங்குள்ள மத சிறுபான்மையினர் கூறுகின்றனர். பெரும்பான்மை இந்து சமுதாய மக்கள் ஒரே நிலைப்பாட்டில் இருக்கும்போது, மத சிறுபான்மையினர் மட்டும் ஏன் இது போன்ற பிரசங்கங்களில் ஈடுபடுகின்றனர். தி.மு.க இந்துக்களை அவமானப்படுத்துகிறது. ஆனாலும் அந்த கட்சியிலுள்ள இந்துக்கள் தொடர்ந்து எவ்வாறு தி.மு.க-வுக்கு வாக்களிக்கிறார்கள். 


இந்த பதிவுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் மோசமான சூழல்களை பேசுகின்றன. இதே போன்ற சூழலை பொன்.இராதாகிருக்ஷ்ணன் கடந்த 2004-ஆம் ஆண்டிலேயே சந்தித்தார். அப்போது பல மேம்பாட்டு பணிகளை செய்திருந்தார். முதன் முதலாக மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தார். இது அந்த தொகுதி மக்களின் ஒரு நீண்ட கால கனவாகும். இதற்கு முன்பு இருந்த எம்.பி-க்கள் இந்த திட்டத்தை அறிவித்தும் ஒருவராலும் இதை செய்ய முடியவில்லை. 


அகில இந்திய மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு மையத்தை கொண்டு வந்தார். சுகாதாரத்திட்டங்கள் பலவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றினார். 


ரோமன் கிறிஸ்தவ மீனவர்கள் அதிக பயனடையும் கடலோர மீனவர்களுக்கான சிறப்புத்திட்டங்களை நிறைவேற்றினார். அவர் 1999 - 2004-ஆம் ஆண்டுகளில் செய்த பணியைக் கொண்டு அவர்தான் வெற்றி பெறுவார் என கூறினார். ஆனால் அவர் 2004-ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 


இதற்கான காரணம் மிகவும் எளிமையானது.


ரோமன் கத்தோலிக்க தேவாலயமும், தென்னிந்திய திருச்சபையும் எப்படியேனும் பா.ஜ.க-வை தோற்க வேண்டும் என முடிவு செய்து விட்டன. வளர்ச்சி என்பது முக்கியமல்ல, அதுபோல மத சார்பின்மையும் முக்கியமல்ல. பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும் என்பதே முக்கியம். இத்தனைக்கும் அப்போது அடல்பிகாரி வாஜ்பாய்தான் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கிறிஸ்தவர்கள் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் ஒரே பக்கம் சென்றதை அடுத்து பொன்.இராதாகிருஷ்ணன் தோல்வி 2004-ல் உறுதி செய்யப்பட்டது. 


2004-ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக பல கட்சிகள் போட்டி இருந்தாலும் அனைத்து கிறிஸ்தவ வாக்குகளும் ஒட்டு மொத்தமாக திரட்டப்பட்டன. 


இத்தனைக்கும் பொன்.இராதாகிருஷ்ணனுக்கு நிரந்தர வாக்கு வங்கியாக 3.5 இலட்சம் வாக்குகள் குமரியில் தற்போது உள்ளது. இருந்தும், கிறிஸ்தவ வாக்குகள் சிதறினால் மட்டுமே எளிதாக ஜெயிக்க முடியும் என்ற நிலை. இத்தனைக்கும் அவரைப்போல பணியாற்றியவர்கள் அங்கு யாரும் இல்லை என்ற பெயர் இருந்தும் அந்த நிலைமை என்று பதிவிட்டுள்ளனர்.


இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட பிரபல கம்யூனிச சிந்தனை எழுத்தாளரும், இந்துத்வா எதிர்ப்பு இயக்கத்தை சமீபத்தில் நடத்தியவருமான லக்ஷ்மி மணிவண்ணன் தனது சமூக வலைதளமான முகநூலில் பொன்னார் சிறந்த மக்கள் நல தொண்டர் எனவும், மிக சிறந்த வேட்பாளர் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது: 


குமரி தொகுதியில் நான் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரிக்கிறேன்


கழிந்த முப்பது வருடங்களில் அல்லது அதற்கும் மேலாக இந்த தொகுதியில் நடைபெற்ற ஆக்கப் பணிகளில் பொன் ராதாகிருஷ்ணனின்  ஐந்தாண்டுகள் மிகவும் குறிப்பிடத் தகுந்தவை.சாலைகள்பாலங்கள் என ஏராளம் பணிகள் நடைபெற்றிருக்கின்றன.உள்ளம் வெளிப்டையானதாக இருக்குமாயின் இதனை மறுக்கவே முடியாது.அவர் மிகவும் உத்வேகத்துடன் இந்த காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்.


உள்ளார்ந்த ஈடுபாடு கொண்டு இவற்றைச் செய்து கொண்டிருக்கிறார்.ஒருவர் நினைத்தால் இவ்வளவு காரியங்களை தனது தொகுதிக்குச் செய்து விட முடியும் என்பதற்கு அவர் ஒரு முன் மாதிரி. இனி எவர் இந்த தொகுதியில் வந்தாலும் அவர் அவ்வளவு செய்தார்: நீங்கள் என்ன செய்தீர்கள் என்கிற கேள்வி மக்கள் முன்பாக இருந்து கொண்டிருக்கும்.


சாலைகள்,பாலங்கள் வேலை நடைபெறுகிற போது சிரமாக உணர்ந்த காரியங்கள் தாம் அவை.இப்போது அதன் பலனை அனுபவிக்கும் போது பொன்னார் ஆற்றியிருக்கும் காரியங்கள் எவ்வளவு அபாரமானவை என்று தோன்றுகிறது. இந்த தொகுதியில் இவ்வளவு வேலைகள் நடைபெற்றது பொன்னாரின் இந்த ஐந்து ஆண்டுகளில்தான்.இவை இன்னும் இந்த தொகுதியின் ஐம்பது ஆண்டுகளுடன் தொடர்பு கொண்டவை என்பதில் சந்தேகமே இல்லை.


தி.மு.க வின் ஹெலன் டேவிட்ஸன் அம்மையார் 


என்று ஒருவர்  இங்கே எம்பியாக இருந்தார்.பாலங்களே இந்த மாவட்டத்தில் சாத்தியமில்லை என்று சொன்னவர்.தொகுதி மேம்பாட்டு நிதி அத்தனையையும் பிஸ்கட் வாங்கித் தின்றே தீர்க்க முடியும் என நிரூபித்தவர்.அதற்கும் முன்பாக காங்கிரஸ் எம்பிக்கள் திருமண வீடுகளுக்கும் ,துஷ்டி வீடுகளுக்கும் தவறாமல் வந்து செல்பவர்கள், பெரும்பாலும் கிறிஸ்தவ பிரதிநிதிகள்.அவர்களுக்கே பெரும்பாலும் உழைத்தார்கள்.


கன்னியாகுமரி மாவட்டம் இயல்பிலேயே கிறிஸ்தவ ஆதிக்கம் நிறைந்த மாவட்டம்.இந்த மாவட்டத்தின் காங்கிரஸ் என்பது கிறிஸ்தவ காங்கிரஸ்தான் .


கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் உட்பட ஏராளம்.அவை இந்துக்களிடம் மிகுந்த பாரபட்சத்தைக் கடைபிடிப்பவை.


கிறிஸ்தவ அதிகாரிகள் வணிகக்கடன் வழங்கும் பொறுப்புகளில் இருக்கும் போது இந்து வணிகர்கள் நிறைய சிரமங்களை அடைவார்கள். 


பொன்னாரின் இந்த ஐந்து வருட காலத்தில் இந்து வணிகர்கள் முத்ரா வங்கி கடன்கள் போல நிறைய விஷயங்களில் பயன் பெற்றார்கள். மாடுகள் வளர்ப்போர்,ஆடுகள் வளர்ப்போர் பயனடைந்தார்கள்.எங்களுடைய பஞ்சாயத்திற்கு உட்பட்ட சிறுபகுதியில் மட்டுமே 472 பேர் வீடு கட்டுவதற்காக இரண்டரை லட்சம் உதவி பெற்றிருக்கிறார்கள்.


பொன்னாரின் குமரியில் இந்த ஐந்தாண்டுகளில் பெரிய சாதி,மதப் பிணக்குகள் ஏற்படவில்லை என்பதே உண்மை.அது ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் சில ஏற்பட்டபோது அதனை தனது திறமையால்,நிர்வாகத்தால் பல தரப்புகளுடனும் பேசி தடுத்தார்


கன்னியாகுமரி தொகுதியில் கிறிஸ்தவ வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும்  அதிகம்,  கழிந்த முறை நிலவிய நான்குமுனைப் போட்டியால் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வெல்வது எளிமையாக இருந்தது. இந்த முறை அப்படியிருக்காது எனினும் நான் பொன்னாரையே ஆதரிக்கிறேன். கழிந்த முப்பது வருடங்களில் குமரி மாவட்டத்திற்கு அமைந்த சிறந்த வேட்பாளர் அவர்.ஒருவர் என்ன பேசுகிறார் என்பதைக் காட்டிலும் முக்கியமானது அவர் என்னசெய்கிறார் என்பதே என்று கூறியுள்ளார். 




https://www.facebook.com/permalink.php?story_fbid=2323914457898198&id=100008389998084
Facebook Post of Lakshmi Manivannan, Communist Writer


அவர் நிறைய பணிகள் செய்து கல்வியில் சிறந்தவர்களிடம் கூட நல்ல பெயரை பெற்றுள்ளார். அவர் எதிர்பார்ப்பது ஓன்று. ஆனால் அது நடக்காமல் கூட போய் வருத்தப்படும் நிலைமைகள் ஏற்படலாம். இதற்கு காரணம் சர்ச்சுகளின் ஜனநாயகத்தை நெகிழவைக்கும் நடவடிக்கைகள்தான். 


சமீபத்தில் குமரி வந்திருந்த இராகுல் காந்தி தங்கள் காங்கிரசின் வழிப்படி இந்த மாவட்டத்தில்  மத பிரிவினைவாதம் ஏற்படவே வழி செய்யும் வகையில் பேசினார். பைபிளில் இருந்து சில வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டி பேசியது மற்றும் தமிழ் மொழியை மோடி அரசு டார்ச்சர் செய்வதாக கூறியது இவற்றை கவனிக்கலாம். இராகுல் பேரணி நடத்திய இடம் மற்றும் பேசிய இடம் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானமாகும். இங்குதான் இந்துக்களை மதம் மாற்ற வைக்கும் மோகன் சி லாரசின் கிறிஸ்தவ பிரசங்கங்கள் நடக்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இராகுல் காந்தியும், காங்கிரசும் ஒரு தெளிவான செய்தியை தெரியப்படுத்தியுள்ளார்கள். அதாவது கிறிஸ்தவர்களுக்கு வளர்ச்சியைவிட மதம் தான் முக்கியமென்ற செய்திதான் அது. மதச்சார்பின்மைக்கு எதிரான ஒரு கிளாசிக்கல் வழக்காக இது முன்வைக்கப்படுகிறது.


ஒரு அமைச்சராகவும், எம்.பி-யாகவும் இருந்துக்கொண்டு தனது உடல்நலனை பொருள் படுத்தாமல் பல வசதிகளை ஏற்படுத்தினார் பொன்னார். இதற்கு முன் உயிருக்கு ஒரு ஆபத்து என்றால் கிறிஸ்தவராகட்டும், இந்துவாகட்டும் எல்லோரும் திருவனந்தபுரம் மருத்துவமனைக்குத்தான் செல்வார்கள். அதற்கு, போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரங்கள் ஆகும். இப்போது பொன்னாரின் அயராத முயற்சியால் 5 ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய மேம்பாலம் கட்டப்பட்டதால் 2 மணி நேரத்தில் விரைவாக சென்று விடுகிறார்கள். இரவும், பகலுமாக அந்த மேம்பாலம் கட்டப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் பொன்னார் செய்த மதங்களுக்கும் அப்பாற்பட்ட மனித சேவைகள், மிகப்பெரிய திட்டங்களை கொண்டு வந்து செய்த மாபெரும் சாதனைகள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை.
மிக முக்கியமாக சொல்லப்போனால் வெளிநாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட  மீனவர்களை  விடுதலை செய்தது மிக சவாலான சாதனை. இவ்வளவு சாதனைகள் செய்தும், தொகுதி மக்களிடத்தில் நல்ல பெயரெடுத்தும் அவர் வெற்றி பெறுவதில் மிகவும் போராடுகிறார். 


பிரபல முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாளர் ரங்கராஜ் பாண்டேவால் தமது  இணைய தொலைகாட்சியில் வெளியிடப்பட்ட தேர்தல் கணிப்பில் கூட பொன்னார் குறைந்தபட்ச வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெளி மாவட்டத்தில் இருந்து வந்து வேட்பாளராக போட்டியிடும் ஒரு தொழில் அதிபரை வெற்றி கொள்ளக் கூடும் என்றும் அதே சமயத்தில் பிரியும் மத வாக்குகளால் வெற்றி இழுபறி நிலைக்கும் தள்ளப்படலாம் என கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.


கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்துவ மக்களுக்கு ஒரு சுவாரஸ்யமான வழி உள்ளது. இந்த தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் அது தேசிய மற்றும் பொதுவான மக்களின்  வளர்ச்சி மற்றும் நலன்களைக் காட்டும். கிறிஸ்துவர்கள் தங்களை நிர்வகிக்கும் தேவாலயங்களின் பிஷப்புகளால் தங்களின் வாக்குகளை விற்கப்படுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. 


கன்னியாகுமரி தொகுதி தேர்தல் முடிவுகள் இந்த மாவட்டத்தின் மத நல்லிணக்க விவகாரங்களிலும், எதிர்கால வளர்ச்சியிலும் ஒரு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.


This story is translated from Swarajya Magazine's article titled "Everybody Agrees Pon Radhakrishnan Has Been A Dedicated And Hard Working MP For Kanyakumari, But He’s Still Struggling; Reason-Church" 


Similar News