மத்திய அமைச்சர் பொன்னாரை சபரிமலை செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய கேரள காவல்துறை, ஹிந்து மத வெறுப்பின் உச்சத்தில் கேரள கம்யூனிச பினராய் அரசு!

மத்திய அமைச்சர் பொன்னாரை சபரிமலை செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய கேரள காவல்துறை, ஹிந்து மத வெறுப்பின் உச்சத்தில் கேரள கம்யூனிச பினராய் அரசு!

Update: 2018-11-21 07:28 GMT
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலை தரிசனத்திற்காக நீலக்கல்லை அடைந்தார். அமைச்சரின் வாகனத்தை மட்டுமே அனுமதிக்க முடியும், மற்றவர்கள் பம்பையை கேரள அரசு பேருந்துகள் மூலம் அடையலாம் என கேரள காவல்துறையால் கூறப்பட்டது. ஆனால், மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் மற்றும் பிற பா.ஜ.க தலைவர்கள் இதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு தேவையற்ற முறையில் பக்தர்களை தொந்தரவு செய்வதாக அமைச்சர் கூறினார். கேரள பா.ஜ.க. தலைவர் ஏ.என்.ராதாகிருஷ்ணனும் அமைச்சருடன் உடன் இருந்தார்
பா.ஜ.க தலைவர்கள் மற்றும் எஸ்.பி.யதீஷ் சந்திரா இடையே ஒரு வார்த்தை போராட்டமே அங்கு நடந்தது.
மத்திய அமைச்சருக்கு உகந்த மரியாதை மறுக்கப்பட்டுள்ளதாக கேரள காவல் அதிகாரியை கேரள பா.ஜ.க கடுமையாக தாக்கியுள்ளது.
https://twitter.com/BJP4Keralam/status/1065157788182052865?s=20
இதையடுத்து மத்திய அமைச்சர் தான் மட்டும் காரில் செல்வதை தவிர்த்து, பக்தர்களுடன் இணைந்து அரசு பேருந்தில் ஏறி பம்பைக்கு சென்றார்.
Pic Credits - Manorama

Similar News