எதுவுமே தெரியாது என்ற நிலை யாருக்கும் வரக்கூடாது - 69 இலட்சம் பேர் பயனடைந்த PMKVY திட்டம்!

எதுவுமே தெரியாது என்ற நிலை யாருக்கும் வரக்கூடாது - 69 இலட்சம் பேர் பயனடைந்த PMKVY திட்டம்!

Update: 2019-12-03 11:30 GMT

வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் அதிக திறன் கொண்ட தொழிலாளர்களின் தேவை நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, திறன் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். உலகிலேயே இந்தியாதான் திறனின் தலைநகராகத் திகழவேண்டும் என்பதும் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு சிறப்பான வாழ்வாதாரத்தை வழங்கவேண்டும் என்பதுமே PMKVY திட்டத்தின் நோக்கமாகும்.


திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் 2015-ம் ஆண்டு தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. பல்வேறு துறைகளில் காணப்படும் திறன் குறைபாடுகளால் நாடு சந்திக்கும் சவால்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அடுத்த ஏழாண்டுகளில் (2022-ல்) 104.62 மில்லியன் தொழிலாளர்கள் புதிதாக இணையப்போவதாகவும் அவர்களுக்கு திறன் பயிற்சியளிக்கவேண்டும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது பண்ணை மற்றும் பண்ணை அல்லாத துறைகளிலிருக்கும் 298.25 மில்லியன் தொழிலாளர்களுக்கும் மறுபடியும் திறன் பயிற்சியளிக்கவேண்டியது அவசியமாகிறது.


திறன் இந்தியா திட்டம் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள உதவும். இதைச் சாத்தியப்படுத்த ஒரே நோக்கத்திற்காக செயல்படும் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்படுகிறது. தொழில் புரிவதற்குத் தேவையான திறன்களை அளிப்பதும் தொழில்முனைவிற்கான வாய்ப்புகளை அளிப்பதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சமீபத்திய தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்து தரமான பயிற்சியளிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது வரை இத்திட்டத்தின் மூலமாக சுமார் 69 இலட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது




Similar News