நாளை காலை பத்திரிகையாளர் சந்திப்பு - காங்கிரசில் இருந்து வெளியேறுவதை அறிவிப்பாரா சச்சின் பைலட்? #PressConference #SachinPilot #Rajasthan

நாளை காலை பத்திரிகையாளர் சந்திப்பு - காங்கிரசில் இருந்து வெளியேறுவதை அறிவிப்பாரா சச்சின் பைலட்? #PressConference #SachinPilot #Rajasthan

Update: 2020-07-14 12:35 GMT

ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் புதன்கிழமை (ஜூலை 15) காலை 10:00 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.

"காங்கிரசும் திரு பைலட்டும் இனி சேர்ந்து செயல்படும் சாத்தியக்கூறுகள் இல்லை. இப்போது எஞ்சியிருப்பது அவர் காங்கிரஸிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறுவது தான். அவர் நாளை காலை 10 மணிக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவார்" என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அசோக் கெலோட் தலைமையிலான தனது சொந்த அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த பைலட், இன்று துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கட்சியின் முடிவுக்குப் பிறகு, தனது அடுத்த நடவடிக்கை குறித்து மவுனமாக இருந்த பைலட் ட்விட்டரில் 'உண்மைக்கு பிரச்சினை கொடுக்கலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது' என்றார். 



இந்த முடிவை பகிரங்கப்படுத்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக பைலட் பாஜகவிடம் "சிக்கினார்" என்று கூறினார்.

"நாங்கள் சச்சின் பைலட்டுக்கு பல வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். அவர் ஒரு MP, மத்திய அமைச்சர் மற்றும் மாநில கட்சித் தலைவராக இருந்துள்ளார். சச்சின் பைலட்டும் அவரது சகாக்களும் பாஜகவால் போடப்பட்ட ஒரு வலையில் வீழ்ந்ததில் நான் வருத்தப்படுகிறேன். இது ஏற்றுக்கொள்ள முடியாதது," சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

அவரது விசுவாசிகளான விஸ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரும் அமைச்சரவை அமைச்சர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

கட்சி சட்டமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், உரையாடலின் மூலம் பிரச்சினையை தீர்க்கவும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து பைலட் மற்றும் அவர் ஆதரவு MLA க்களுக்கு பல முறையீடுகள் வந்த பின்னர், இந்த முடிவு வந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியில் (BJP) சேர எந்த திட்டமும் இல்லை என்று பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் கூறியுள்ள நிலையில், நாளைய பொதுக் கூட்டத்திற்குப் பிறகுதான் அவரது திட்டம் தெளிவாக இருக்கும். இருப்பினும், கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர, தற்போது அவருக்கு எந்தவிதமான வழியும் இருப்பதாகத் தெரியவில்லை.

Source: NDTV

Similar News