பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் - அடேங்கப்பா... தமிழகத்தில் இத்தனை பேருக்கு பணி நியமன ஆணையா?
பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 1046 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த ஆணையை வழங்கினார்.
பிரதமர் மோடியின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டில் இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற அரசின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி 45 இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் 71,000 -க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1046 பேருக்கு பணிநியமான ஆணை வழங்கப்பட்டது. இதற்கான விழா சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்றது. சென்னை வாணி மகாலில் நடந்த விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பணிநியமான ஆணைகளை வழங்கினார். இதில் தபால் துறை சார்பில் 158 பேர் , ரயில்வே துறையில் 60, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் 1, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் எட்டு ,ராணுவத்தில் 5 , கல்வித்துறையில் 15 உள்ளிட்ட 247 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
இதேபோல் திருச்சியில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் மதிய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி 278 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதேபோல் மதுரையில் நடந்த விழாவில் மத்திய சுற்றுலா துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி பாதைகள் துறை இணைய மந்திரி ஸ்ரீபத் நாயக் பங்கேற்று 200 பேருக்கும் கோவையில் நடந்த விழாவில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை மந்திரி ஜான் பிர்லா 371 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.