உள்ளிருப்பு நேரத்தில் நம்பிக்கையூட்டும் மனிதர்களை அறிந்துக் கொள்ளுங்கள்!

உள்ளிருப்பு நேரத்தில் நம்பிக்கையூட்டும் மனிதர்களை அறிந்துக் கொள்ளுங்கள்!

Update: 2020-04-03 02:21 GMT

1. இவர் குழந்தையாக இருந்தபோது திக்கி திக்கி பேசும் தன்மையுடைவராக இருந்தாராம். இவருடைய பள்ளி ஆசிரியர், அக்குழந்தையின் 'திக்கி பேசும்' பேச்சு தன்மையை பார்த்து, அக்குழந்தையின் தந்தையை போல் அரசியலில் மட்டும் ஈடுபட்டுவிட வேண்டாம் என அறிவுருத்தினாராம். ஊக்கமற்ற வார்த்தைகளையும் கடந்து வெற்றி பெற்ற அந்த குழந்தை?

*வின்ஸ்டன் சர்ச்சில்

2. இவர் பணியாற்றி வந்த பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். இவருடைய பணிநீக்கத்திற்க்கு அந்நிறுவனம் சொன்ன காரணம் போதுமான அளவு கற்பனைதிறனும், தனித்துவமும் இல்லை என்பதே. அதை தொடர்ந்து, வாகனக்கூடம் ஒன்றில் இவர் வேலைபார்த்து வந்த போது அங்கு விளையாடி கொண்டிருந்த சுண்டெலியை பார்த்து இவருக்கு உதித்த கற்பனையும், திட்டமும் உலக சரித்திரத்தில் வெற்றிகரமான கதாபாத்திரமாக உலா வந்தது. இவர்?

**வால்ட் டிஸ்னி - இவர் உருவாக்கிய கதாபாத்திரம் மிக்கி மவுஸ்

3. 1955 ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றை எழுதினார் இந்த பெண். அந்த புத்தகம் 12 பதிப்பகத்தாரால் நிராகரிக்கப்பட்டது. எதற்கும் சோர்வடையாமல், தன் படைப்பு மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையால், அந்த புத்தகத்தை, ஓர் சிறிய பதிப்பக நிறுவனம் வாங்கி பிரசூரித்தது. இன்று அப்புத்தகத்தின் விற்பனை மூலம், உலகின் பணக்கார பெண்கள் பட்டியலில் அப்புத்தகத்தை எழுதிய பெண் எழுத்தாளரும் ஒருவர். அவர்?

** ஜெ.கெ. ரவுளிங்க் - அவர் எழுதிய புத்தகம் "ஹாரி பாட்டர்"

4. இரண்டு முறை நோபல் பரிசு பெற்று, தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் உலகின் பார்வையை ஈர்த்த போதும், பெண் என்பதற்காக, பிரஞ்ச் அகாதமியில் உறுப்பினாராக சேர அனுமதி மறுக்கப்பட்டவர். அவர்?

** மேடம் கியூரி - ரேடியத்தை கண்டறிந்தவர்

5. நகல் எடுக்கும் முறையை 1938 ஆம் ஆண்டே கண்டறிந்த போதும், அதை முழுமையாக செயல்படுத்தும் இயந்திரத்தை உருவாக்க 21 ஆண்டுகள் காத்திருந்தார் அதன் கண்டுபிடிப்பாளர். தன் திறன் மீது நம்பிக்கையிருந்தால் பொறுமையும், நிதானமும் கூட வெற்றிக்கான வலுவான படிக்கல் என்பதை அறிந்த அந்த மனிதர்

**சார்ல்ஸ் கார்ல்ஸன்

6. இவருடைய மீசையை பார்த்து ஒருவர் கேட்டாராம், உங்களுடைய சிறிய மீசை தற்போதையை சூழலுக்கு ஏற்றார் போல் நாகரீகமாக இல்லையே என்று?

அதற்கு அந்த மனிதர், "இப்போது இது நாகரீகமானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் எதிர்காலத்தில் நிச்சயம் இருக்கும். காரணம் இந்த மீசையை வைத்திருப்பது நானல்லவா?" என்று சொன்னாராம்.

அந்த நம்பிக்கை மிகு மனிதர்...?

** ஹிட்லர்

7. இவருக்கு இருட்டை பார்த்தால் பயம். தன்னுடைய பலகீனத்தாலே தன்னுடைய பலத்தை உலகிற்க்கு பறைசாற்றிய வெற்றியாளர்...?

** தாமஸ் ஆல்வா எடிசன் - "எலக்ட்ரிக் பல்பை" கண்டறிந்தவர்

8. கடும் குளிரில் இருந்து தன்னை காத்து கொள்வதற்காக, தன்னுடைய ஓவியங்களையே எரித்து குளிர் காய வேண்டிய வறுமையான சூழல் இவருக்கு இருந்தது என்று சொல்லப்படுகிறது....! இன்று இவர் பெற்றிருக்கும் புகழுக்கும், வெற்றிக்கும் முன் இவர் சந்தித்த வறுமையும் தடைகளும் வெறும் நீரோவியங்களாக கலைந்து விட்டன. அந்த சாதனை மனிதர்...?

**பெப்லோ பிக்காஷா 

Similar News