இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவங்கள்.! ஆபரேஷன் கிளீன் தமிழகம்.!

இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகத்தில் அரங்கேற இருக்கும் தரமான சம்பவங்கள்.! ஆபரேஷன் கிளீன் தமிழகம்.!

Update: 2019-10-21 05:56 GMT

தற்போது தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதன் முடிவுகள் வரும் 24 ஆம் தேதி அறிவிக்கப்டுகின்றன. விக்கிரவாண்டியில் வெற்றி அலை அதிமுகவின் பக்கமே உள்ளது. நாங்குநேரி இழுபறியில் உள்ளது.


இந்த நிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் தமிழகத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளது. முக்கியமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தியாவில் எல்லா மாநிலங்களை விட தமிழகத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி வருவது அதிகமாகி உள்ளதாகவும் அதற்கு சில சிறு அரசியல் கட்சிகள் தான் காரணம் என்றும் அந்த சிறு அரசியல் கட்சிகளுக்கு நிதி வெளிநாட்டில் இருந்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளுடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஐ.எஸ்.ஐ.எஸ்ஆதரவு தீவிரவாதிகள் இந்தியாவில் 127 பேர் கைது செய்யப்பட்டனர் அதில் 33 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றர். அவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்முறையை தூண்டும் விதத்தில் பேசினால் கைது செய்யப்பட்டு பெயர் வாங்கிவிடலாம் ஓட்டுக்களை பெற்றுவிடலாம் என எண்ணி பேசிய சீமானை கைது செய்யாமல் இருந்தது காவல்துறை. ஆனால் தற்போது இடைத்தேர்தல் முடிந்து விட்ட நிலையில் சீமானை எந்த நேரத்திலும் காவல்துறை தூக்க ரெடியாகி உள்ளது. அவருக்கு வக்காலத்து வாங்கிய சில அரசியல் பிரமுகர்களையும் குறி வைத்துள்ளது காவல்துறை.


அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து நடத்திய பேரணியில் அவரை இழிவாக பேசிய முஸ்லீம் அமைப்புகளின் பின்புலத்தை ஆராய தொடங்கியுள்ளது உளவுத்துறை. இதை தெரிந்துதான் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமா அமைதி காத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வை.கோ அவர்களுக்கும் அடக்கி வசித்து வருகின்றனர்.


இது ஒருபுறம் இருக்க மத மோதல்களை தூண்டுவது போல் இந்து கடவுள்களை மட்டும் கேலி செய்யும் கருப்பு சட்டைக்காரர்களும் நடவடிக்கைக்கு விதிவிலக்கு அல்ல அவர்கள் மீதும் உளவுத்துறை கண் வைத்து விட்டது.முகநூலில் கோ பேக் மோடி பாகிஸ்தானிலிருந்து ட்ரெண்ட் செய்யப்பட்டது அதற்கு தமிழகத்தில் இருந்து சில அமைப்புகள் ஆதரவாக களத்தில் இறங்கியது. அவர்களின் தகவல்களையும் சேகரித்துள்ளது உளவுத்துறை.


இனி வரும் நடவடிக்கைகள் ஆபரேஷன் கிளீன் தமிழகம் என்ற சொல்லலாம்


Similar News