பாராளுமன்றத்திற்கு "மட்டம் போட்ட" பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி!

பாராளுமன்றத்திற்கு "மட்டம் போட்ட" பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி!;

Update: 2019-11-23 12:34 GMT

பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் ராகுல் காந்தி ஒழுங்காக கலந்து கொள்வது இல்லை. அவர் திடீர் திடீரென பாராளுமன்றத்திற்கு மட்டம் போடுவது வழக்கமாகி வருகிறது. இதுகுறித்து மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.


நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் வாரத்தில் ஒரு நாள் கூட ராகுல்காந்தி பாராளுமன்றத்திற்கு வரவில்லை. அவர் 5 நாட்களும் பாராளுமன்றத்திற்கு மட்டம் போட்டு விட்டார்.


பாராளுமன்றத்திற்கு சரியாக வராத ராகுல்காந்தியின் செயலுக்கு பல மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் வருத்தத்தை தெரிவித்து உள்ளனர்.


இதுகுறித்து பாஜக எம்.பி.ஜெகதாம்பிகா பால் கூறியதாவது:-


ராகுல் காந்தி போன்ற இளம் தலைவர்கள், பாராளுமன்றத்திற்கு ஒழுங்காக வராமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இளம் தலைவர்களாக உள்ளவர்கள் கண்டிப்பாக பாராளுமன்ற அவைக்கு வரவேண்டும். மிக வயதான நாங்களெல்லாம் ஒழுங்காக அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும்போது, வயதில் குறைந்த இளம் தலைவர்கள் அவை நடவடிக்கைகளில் தொடர்ந்து கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது வருத்தமாக உள்ளது.


 இளம் தலைவர்களின் இதுபோன்ற மனநிலை, கவலைக்குரியது. மக்கள் எங்களை தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள்.  நாங்கள் அவரது பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேச வேண்டும். அதற்கான தீர்வுகளை காண வேண்டும். ஆனால் ராகுல் காந்தி அடிக்கடி பாராளுமன்றத்தில் இருந்து காணாமல் போய்விடுகிறார். இது நமது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது.


இவ்வாறு ஜெகதாம்பிகா பால் வருத்தத்துடன் தெரிவித்தார்.


Similar News