அயோத்தி வழக்கு வருவதால் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே போலீசாருக்கு விடுப்பு கிடையாது !

அயோத்தி வழக்கு வருவதால் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே போலீசாருக்கு விடுப்பு கிடையாது !

Update: 2019-11-08 04:42 GMT

அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வர உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். 


தீர்ப்பு வர உள்ளதால் நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இதனால் அயோத்தியில்  போலீசார் குவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் உள்துறை அமைச்சகம் சார்பாக மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் தற்போது இந்தியன் ரயில்வே அனைத்து ரயில்வேவிற்கும் அறிவுரை கடிதம் ஒன்றை அனுப்பி,அயோத்தி வழக்கு வருவதால் ரயில்வே போலீசாருக்கு விடுப்பு கிடையாது,ரயில்வே போலீசார் அதிக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ரயில்களில் தாக்குதல் நடக்காமல் பாதுகாக்க வேண்டும்.


வெடிகுண்டு சோதனைகளை தீவிரமாக நடத்த வேண்டும். மக்கள் எல்லோரையும் சோதித்த பின்தான் ரயில் நிலையத்திற்குள் அனுப்ப வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.தீர்ப்பு வருவதற்கு முன்பும், வந்த பின்பும் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



Similar News