நள்ளிரவு 11.58 மணி வரை நீடித்த ரயில்வே மானியக் கோரிக்கை! 18 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் நடந்த நீண்ட விவாதம் !!

நள்ளிரவு 11.58 மணி வரை நீடித்த ரயில்வே மானியக் கோரிக்கை! 18 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் நடந்த நீண்ட விவாதம் !!

Update: 2019-07-12 07:58 GMT


பாராளுமன்றத்தில் ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நண்பகல் தொடங்கியது. இந்த விவாதத்தில் பல்வேறு எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசினார்கள். இரவு 11.58 மணிவரை நடந்த விவாதத்தில் 100 - க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசினார்கள்.


இந்த விவாதத்தின்போது பேசிய பாஜக எம்.பி. சுனில் குமார், “காங்கிரஸ் ஆட்சியில் இருந்த ரயில்வே துறையின் செயல்பாட்டைக் காட்டிலும் இப்போது இருக்கும் ரயில்வே துறை சிறப்பாகச் செயல்படுகிறது. ஏராளமான புதிய மைல்கற்களை அடைந்துள்ளது. ரயில்வே விபத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 73 சதவீதம் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.


ரயில்வே துறை இணையமைச்சர் எஸ். அங்காடி கூறுகையில், “ரயில்வே குடும்பம் போன்றது. ஒவ்வொருவரையும் மனநிறைவு செய்து, ஒற்றுமையாக இருக்க வைக்கும். அனைத்து உறுப்பினர்களும் நல்லவிதமான ஆலோசனைகள் அளித்தார்கள். வாஜ்பாய் அமைத்துக் கொடுத்த பாதையில், மோடி பிரதமராக வந்தபின் ஏராளமான நல்ல மாற்றங்களை ரயில்வே கண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.


இவ்வாறு ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதம் நள்ளிரவு 11.58 மணி வரை நீடித்தது. இந்த விவாதம் குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “கடந்த 18 ஆண்டுகளில் மக்களவையில் ஒரு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நள்ளிரவு வரை நடந்தது இதுதான் முதல் முறை. இது மிகப்பெரிய சாதனை. பாராளுமன்றத்தில் எம்.பி.க்களும் நள்ளிரவு வரை அமர்ந்திருந்ததும் சிறப்பு” எனத் தெரிவித்தார்.


=


Similar News