ராணுவ வீரர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை.!

ராணுவ வீரர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை.!

Update: 2020-10-25 04:10 GMT

சீனாவுடனான எல்லைப் பகுதியில் மேற்கு வங்கத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த படைப் பிரிவினருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தசாரா கொண்டாட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அவர்‌ வட கிழக்கு பகுதியில் இந்திய ராணுவத்தின் தயார் நிலை மற்றும் தற்போதைய சூழலை ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறப்படுகின்றது. சனிக்கிழமை ஒட்டி உள்ள ஷெராதங், நாது லா உள்ளிட்ட சீனாவுடனான எல்லைப் பகுதிகளையும் அவர் கள ஆய்வு செய்ய உள்ளார்.


தசராவை ஒட்டி இந்தியத் துருந்புகளுடன் இணைந்து ராஜ்நாத் சிங் ஆயுத பூஜை நிகழ்விலும்‌ ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 'ப்ராஜக்ட் ஸ்வஸ்திக்' என்ற திட்டத்தின் கீழ் எல்லைச் சாலைகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் அவர் மேற்பார்வையிட உள்ளார். இதில் சிக்கிம்‌ செல்வதற்கான ஒரு‌ மாற்றுச் சாலை அமைக்கும் திட்டமும் அடங்கும் என்று தெரிகிறது.


சீனாவின் விரிவாக்கவாத, ஏகாதிபத்திய போக்கை எந்த சூழ்நிலையிலும் எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவமும் விமானப் படையும் எல்லையில் முன்களத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் போருக்கு ஆயத்தமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் 'ஆயுத பூஜை'காக ராஜ்நாத் சிங் 33 Corps படைப் பிரிவை சந்திக்கச் செல்வது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சீன ராணுவம் பிரச்சினை செய்யும் மூன்று திசைகளிலும், மேற்கில் லடாக், மத்தியில் உத்திரகண்ட், ஹிமாச்சல் மற்றும் கிழக்கில் அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய பகுதிகளில் வீரர்கள் முன்களத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சர் அவற்றில் ஒரு பகுதியில் 10,000 முதல் 12,000 வீரர்களைக் கொண்ட 33 Corps படைப் பிரிவின் மலைப் பிரிவு வீரர்களை சந்தித்து 'ஆயுத பூஜை' செய்ய உள்ளது முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

Similar News