தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் நியாய விலைக் கடைகளில் இலவசமாக கிடைக்கும்.!

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் நியாய விலைக் கடைகளில் இலவசமாக கிடைக்கும்.!

Update: 2020-04-13 13:00 GMT

பிரதமரின் கலந்தாய்வின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படைகளின்படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டு, ஏப். 11 அன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவின்படி ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், (சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை தலா 1 கி.கி, எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி) நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.



கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ரூ.1,000 நிவாரண உதவி வழங்கப்படும்.

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விவசாய விளை பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல எந்தவித பாஸ் மற்றும் அனுமதியும் தேவையில்லை. தடையில்லாமல் விளைபொருட்களை எடுத்துச் செல்லலாம். 

Similar News