சிலைக்கே இந்த நிலை என்றால் சிறுபான்மையினரின் கதி என்ன? பாகிஸ்தானில் பழமையான புத்தர் சிலையை உடைத்துப் போட்ட அவலம்! #ReligiousHatred

சிலைக்கே இந்த நிலை என்றால் சிறுபான்மையினரின் கதி என்ன? பாகிஸ்தானில் பழமையான புத்தர் சிலையை உடைத்துப் போட்ட அவலம்! #ReligiousHatred

Update: 2020-07-19 11:50 GMT

பாகிஸ்தானில் உள்ள கைபர்-பக்டுன்வா மாகாணத்தில் வீட்டின் அடித்தளத்திற்காக குழி தோண்டப்பட்ட போது கிடைத்த புத்தர் சிலையை இஸ்லாமிய கட்டிடத் தொழிலாளர்கள் அடித்து உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது‌.

கைபர்-பக்டுன்வா மாகாணத்தில் உள்ள மர்டான் மாவட்டத்தின் தக்ட் பாய் பகுதியில் அடித்தளம் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்ட போது பழைமையான புத்தர் சிலை ஒன்று கிடைத்துள்ளது. தகவல் தெரிந்து வந்த அந்தப் பகுதியின் இஸ்லாமிய மத குரு "இதை உடைத்துப் போடுங்கள்! இல்லையென்றால் நரகத்தில் எரிவீர்கள்!" என்று கூறி சிலையை உடைக்கும் வீடியோவை பாகிஸ்தானிய மனித உரிமைகள் ஆர்வலர் ஆரிஃப் ஆஜாகியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த ‌1830ம் ஆண்டு தொல்லியல் ஆராய்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து பல்வேறு வகையான தொல் பொருட்கள் இந்த பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு காந்தார நாகரிகம் செழித்திருந்தது.

பாகிஸ்தானிய தொல்லியல் ஆய்வாளர்கள் வந்து சிலையைக் கைப்பற்றும் முன்னரே துரதிருஷ்டவசமாக அது உடைக்கப்பட்டதால் இந்த பாதக செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொல்லியல் துறை உறுதி அளித்துள்ளது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

நன்றி : ஸ்வராஜ்யா

Similar News