கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் சேவை புரியும் ஆர்.எஸ்.எஸ்

கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் சேவை புரியும் ஆர்.எஸ்.எஸ்

Update: 2020-04-12 13:31 GMT

கொரோனா என்ற கொடிய நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. எப்பொழுதெல்லாம் நமது தாய்நாடு துயரத்திற்குள்ளாகிறதோ அப்போதெல்லாம் களத்தில் இறங்கி முதலில் சேவை புரிவது ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் தான். 

அந்த வகையில், கொரோனா தொற்று நோயின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் களத்தில் இறங்கி பொது மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர். உணவு பொருட்கள், மளிகை, மருந்துகள், காய்கறிகள் ஆகியவை ஏழை எளிய மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்றடைவதை ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் உறுதி செய்து வருகின்றனர்.

வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். அதற்கு இலக்கணமாக விளங்குபவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள். இருந்தாலும் அவர்கள் செய்யும் சேவையை அவ்வப்போது யாரேனும் புகைப்படுமோ காணொளியோ எடுப்பது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இன்றியமையாததாக இருக்கிறது. 

அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் கர்நாடக மாநிலத்தில் ஏழை எளிய இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில், மளிகை மற்றும் காய்கறிகள் விநியோகிக்கும் காணொளி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடித்து ஏழை எளிய இஸ்லாமியர்கள் மளிகை மற்றும் காய்கறிகளை கொண்டு செல்கின்றனர். 

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை மத வெறியர்கள் போல் சித்தரிக்க இங்குள்ள பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றன. 



ஆனால் உண்மை என்பதோ வேறு விதமாக இருக்கிறது. மத, சாதி, இன வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் வேண்டிய சேவையை அமைதியாக புரிவது தான் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களின் தனித்துவமாக இருக்கிறது. 

Similar News