ஏ.கே. 47 துப்பாக்கியை போன்றது ஸ்புட்னிக் தடுப்பூசி.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடக்கூடிய ‘ஸ்புட்னிக் லைட்’ தடுப்பூசி ஏகே-47 துப்பாக்கிகளைப் போன்று மிகவும் நம்பகமானவை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

Update: 2021-05-07 11:41 GMT

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடக்கூடிய 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி ஏகே-47 துப்பாக்கிகளைப் போன்று மிகவும் நம்பகமானவை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். உலகத்தையே மிரள வைக்கும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.




 


கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியாக (ஸ்புட்னிக் வி) கண்டுபிடித்த ரஷ்யா, அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அதனை தொடர்ந்து இந்தியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.






 


ஆனால் தற்போது ரஷ்யா மேலும் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. 79.4 சதவீத செயல்திறனைக் கொண்ட 'ஸ்புட்னிக் லைட்' என்ற தடுப்பூசி, ஒரு டோஸ் செலுத்திக் கொண்டாலே போதுமானது.

இந்த தடுப்பூசிக்கு ரஷ்யா அரசு அனுமதி வழங்கியுள்ளது. 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி குறித்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடக்கூடிய 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி, ஏகே-47 துப்பாக்கிகளைப் போன்று நம்பகமானவை. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை எதிர்த்து இந்த தடுப்பூசி போராடும் எனக் கூறியுள்ளார்.

Similar News