சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கம் - பயோபிக்கில் நடிக்கும் 'சமந்தா'!

சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கம் - பயோபிக்கில் நடிக்கும் 'சமந்தா'!

Update: 2020-04-06 07:45 GMT

கடந்த சில வருடங்களாக மறைந்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த வரிசையில் மறைந்த கர்னாடக இசைப் பாடகி நாகரத்னம்மாவின் வாழ்க்கை படமாகிறதி. தமிழி, தெலுங்கு மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்தினில் சமந்தா நடிக்கிறார்.

நாகரத்னம்மா திருவையாற்றில் தியாகராஜர் சமாதியின் மீது கோயில் எழுப்பியவர் ஆவார். தியாகராஜர் ஆராதனை விழாவில் பெண்களும் சமமாகப் பங்குபெறும் உரிமையை பெற்று தந்தவர் தேவதாசிகள் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இப்படி பல பரிமானங்கள் கொண்ட அவர் வாழ்க்கையை சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கவிருக்கிறார்.

Similar News