'சமுத்திர சக்தி' கூட்டு பயிற்சி தொடங்கியது: எந்த இரு நாடுகளுக்கு இடையே நடைபெறுகிறது தெரியுமா?
இந்தியா இந்தோனேஷியா கடற்படைகளிடையே கூட்டு பயிற்சி தொடங்கியது.
இந்தியா மற்றும் இந்தோனேஷியாவின் கடற்படைகள் 'சமுத்திர சக்தி' என்ற கூட்டு பெயரில் ஆண்டு தோறும் கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் 2023 - ஆம் ஆண்டுக்கான 'சமுத்திர சக்தி' கூட்டுப் பபயிற்சி இந்தோனேஷியாவில் நேற்று தொடங்கியது. ஆறு நாட்கள் இந்த கூட்டு பயிற்சி நடைபெறும்
இந்திய கடற்படையின் சார்பில் முற்றிலும் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான ஐ.என்.எஸ் கவரத்தி, டோர்னியர் கடல் ரோந்து விமானம், மற்றும் சேடக் ஹெலிகாப்டர் ஆகியவை பங்கேற்கின்றன . அதேபோல் இந்தோனேஷியா கடற்படை கே.ஆர்.ஐ சுல்தான் , இஸ்கந்தர் முடா போர்க்கப்பல், சி.என்.235 கடல் ரோந்து விமானம் மற்றும் பாந்தக ஹெலிகாப்டர் ஆகியவை பயிற்சியில் ஈடுபடுத்துகின்றன.