பிரதமர் மோடிக்கு ஆதரவளித்த டாக்டர் ராமதாஸ்.. ட்விட் செய்து வம்பில் மாட்டிக்கொண்ட செந்தில்குமார்.!

பிரதமர் மோடிக்கு ஆதரவளித்த டாக்டர் ராமதாஸ்.. ட்விட் செய்து வம்பில் மாட்டிக்கொண்ட செந்தில்குமார்.!

Update: 2020-04-04 09:11 GMT

பிரதமர் நரேந்திரமோடி 5ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டில் 9 நிமிஷம் விளக்கு, அல்லது செல்போன் டார்ச் ஒளிர செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.

கொரோனாவால் இறப்பு விகிதம் உலகம் முழுவதும் 50 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கை பிறப்பித்தார்.

இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது முற்றிலும் தடை பட்டுள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பு இந்தியாவை பாராட்டியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களை கவுரவிக்கும் வகையில் ஞாயிறு 5ம் தேதி இரவு 9மணிக்கு 9 நிமிஷம் வீட்டில் டார்ச் லைட், அல்லது அகல்விளக்கு ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு தெரிவித்தார். தமிழக மக்கள் அனைவரும் வீட்டில் டார்ச் லைட்டுக்கு பதிலாக அகல் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறியிருந்தார்.

இதனை கேளி செய்யும் விதமாக தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் ட்விட் செய்துள்ளார்.

அதில் நாங்க பணம் வாங்குனப்போ நீங்க விளக்கு பிடிச்சிங்களா''னு எங்கள பார்த்து கேள்வி கேட்ட ராமதாஸ்..

இல்லை நாங்க எந்த விளக்கும் பிடிக்கல.

பார்த்து யாரோ சொன்னாங்கனு நீங்களும் ஐயா ராமதாஸ் விளக்கு புடிச்சு அத போட்டோ போட்டு விட போறிங்க.

பின் விளைவுக்கு நாங்கள் பொறுப்பல்ல. இவ்வாறு அவர் மிகவும் தரம் தாழ்ந்து ட்விட் செய்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழகத்தில் இருந்தும் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் பாமக தொண்டர்கள் செந்தில்குமார் எம்.பி.க்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதற்கு சரியான பதில் அளிக்காமல் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

இவர் மட்டும் வயதில் மூத்த அரசியல்வாதியை கேளி செய்யலாம். இவருக்கு கருத்துரிமை உள்ளது.

அதே வேளையில் செந்தில்குமாரை பாமக தொண்டர்கள் ட்விட்டரில் அல்லது, தொலை பேசியில் கலாய்த்தால் காவல்துறையில் புகார் அளிப்பது எந்த விதத்தில் நியாயம்.

இவருக்கு மட்டும் கருத்துரிமை மற்றவர்களுக்கு கருத்துரிமை இல்லையா. இது போன்று கேவலமானவற்றை செய்யாமல் தர்மபுரி மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தால் அடுத்த தேர்தலில் திமுக டெபாசிட் வாங்க வாய்ப்புள்ளது. 

Similar News