ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது செருப்பு வீச்சு!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது செருப்பு வீச்சு!

Update: 2019-11-29 10:08 GMT

ஆந்திரா இரண்டாகப் பிரித்து தெலுங்கானா ஹைதராபாத் தலைநகரை கொண்டு செயல்பட்டு வருகிறது, ஆந்திரா புதிதாக அமராவதி என்ற தலைநகரை உருவாக்குவதற்கு மும்முரமாக வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்,ஆந்திராவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டது ஜெகன் வெற்றி பெற்றார், சந்திரபாபு நாயுடு அமராவதி  சரியான வேலை நடைபெறவில்லை என குற்றம்சாட்டி வந்த நிலையில்,ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு அமராவதி தலைநகருக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.



 அப்போது ஆந்திர அமராவதி சென்ற முன்னாள் சந்திரபாபு நாயுடு பேருந்தின் மீது செருப்பு மற்றும் கற்களை வீசித் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது வெங்கட்புறம் பகுதியில் தலைநகர் அமராவதி உருவாக்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயி சந்திப்பதற்காக சந்திரபாபு நாயுடுவும் நேற்று காலை தனது பேருந்தில் புறப்பட்டுச் சென்றார் அப்போது சந்திரபாபு நாயுடுவின் சுற்றுப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக காத்துக்கொண்டிருந்தார் YSR காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் விவசாயிகள் சந்திரபாபு நாயுடு பேருந்து மீது திடீரென கற்கள் மற்றும் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர் இந்த திடீர் தாக்குதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர், தாக்குதல் சம்பவத்தில் அரசியல் இருக்கலாம் என பலரும் தெரிவித்திருந்த நிலையில் மறுபுறம் உருவாக்கத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகள் சந்திரபாபு நாயுடு மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


Similar News