மானமுள்ள இந்துக்கள் தி.மு.க-வை ஆதரிக்கலாமா?

மானமுள்ள இந்துக்கள் தி.மு.க-வை ஆதரிக்கலாமா?

Update: 2018-09-24 07:05 GMT
அண்ணாதுரையால் உருவாக்கப்பட்டு, கருணாநிதியால் விரிவாக்கப்பட்டு, இப்பொழுது ஸ்டாலின் அவர்களின் கரத்தில் வந்தடைந்திருக்கிறது திராவிட முன்னேற்ற கழகம்(திமுக). ஈ.வெ.ராமசாமியின் கொள்கைகளை பின்பற்றும் கட்சியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தி.மு.க. ஈ.வெ.ராமசாமியின் கொள்கைகளை சுருக்கமாக 'இந்து வெறுப்பு' என்று சொல்லி விடலாம். மற்ற மதங்களைப்பற்றி பேசும்பொழுது அச்சத்துடன் அளந்து பேசுவதும், இந்து மதத்தை மட்டும் எந்நேரமும் விமர்சிக்கும் தைரியம் ஈ.வெ.ராமசாமியின் வழி வந்த திராவிட வீரர்களுக்கே சொந்தமானது. இதில் தி.மு.க ஒன்றும் வேறுபட்டு அல்ல.
தனது கழக தொலைக்காட்சிகளில் இந்து பண்டிகைகளுக்கு 'விடுமுறை தினம்' என்றும், மற்ற மதங்களின் பண்டிகைகளன்று அந்த பண்டிகையின் பெயரிலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் அளவிற்கு இந்து மதத்தின் மீது வெறுப்பு உமிழ்ந்த(உமிழும்) கட்சி தி.மு.க. மற்ற மதத்தின் பண்டிகைகளுக்கு ஓடி சென்று முதல் ஆளாய் நின்று வாழ்த்து தெரிவித்தல், இந்து பண்டிகை என்றால் 'யாருக்கோ என்னவொ' என்று இந்துக்களை எள்ளளவும் மதிக்காமல் இருத்தல் என்பதே திமுகவின் பலவருட நடவடிக்கைகளாகும்.
சமீபத்தில் ஸ்ரீரங்கம் கோயில் அருகே தி.மு.க-வின் தலைவர் ஸ்டாலினுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. அப்பொழுது அவரின் நெற்றியில் வைக்கப்பட்ட சந்தனத்தை அங்கேயே அழித்து தனது இந்து மத வெறுப்பை காண்பித்தார் ஸ்டாலின். இதை மதசார்பின்மை என்று கூறுகிறவர்கள், இசுலாமியர்களின் குல்லாவை போட்டுக்கொண்டு ஸ்டாலின் நோன்பு கஞ்சி குடிக்கும் இந்த படத்தை பார்த்ததும் கேட்கவேண்டிய கேள்வி இதுதான் - "நெற்றியில் வைத்ததை அழித்த மதசார்பின்மை, மாட்டிய குல்லாவை ஏன் கழற்றவிடவில்லை?"
"இந்து பண்டிகைகளை கொண்டாடாத மதசார்பின்மை, கிறித்துவ விழாக்களில் கேக் வெட்ட எப்படி விட்டது?" என்றும் கேள்விகள் எழலாம் தமிழக இந்துக்கள் மனதில். ஆனால், அப்படி எழாதத்திற்கு காரணம், தமிழக இந்துக்களே அறிவர். திராவிடத்தை பொறுத்தவரை மதசார்பின்மை எனும் வார்த்தையில் உள்ள 'மதம்' இந்து மதத்தை மட்டுமே குறிப்பதாகும். பகுத்தறிவு எனும் சொல்லும் இந்து மதத்தை மட்டுமே பகுத்து அறியும். வேறு மதங்களை பகுத்து அறிய மூலையில் இன்னும் திசுக்கள் உருவாகவில்லை என நாம் எடுத்து கொள்ளலாம்.
இந்துமத சாமிகளின் படங்களை செருப்பால் அடித்தல், சிலைகளை உடைத்தல், இந்துமத புராணங்களை கேலி செய்தல், இந்துக்களின் கடவுள்களை விமர்சித்தல் போன்ற செயல்பாடுகள் அனைத்தும் பார்ப்பனர்கள் என்கிற பிராமணர்களை ஒடுக்கவே என சில தி.மு.க உடன்பிறப்புகள் கூறலாம். ஆனால், இந்து மதம் என்பது பார்ப்பனர்களின் மதம் அல்லவே. இந்து மதத்திற்கு பார்ப்பனர்களின் பங்களிப்பை விட பன்மடங்கு செய்துள்ளவர்கள் பார்ப்பனர் அல்லாத இந்துக்களே. ஆக, 'பார்ப்பன வெறுப்பு' என்கிற போர்வையில் 'இந்துமத வெறுப்பை' அள்ளி வீசுகின்றனர் தி.மு.க-வும் அதன் தோழர் திராவிட கழகமும்.
ஈ.வெ.ராமசாமியின் சிலைக்கு களங்கம் என்றவுடன் கொந்தளித்த ஸ்டாலின், அதே ஈ.வெ.ராமசாமியின் பெயரில் சென்ற வாரம் பிள்ளையாரின் சிலைகள் உடைக்கப்பட்ட நிகழ்விற்கு வாயே திறக்கவில்லையே? ஆக, இந்துக்களை மனிதர்களாகவே மதிக்காதவர்கள் தி.மு.க-வினர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தி.மு.க-வில் இருக்கும் இந்துக்களுக்கு(தன்னை இந்து என்று நினைப்பவர்களுக்கு) சில கேள்விகள்:

  1. இப்படி இந்துமதத்தை வெறுக்கும் திமுகவிற்கு எவ்வாறு தன்மானமுள்ள இந்துக்கள் பணிபுரிகிறார்கள்?

  2. உங்களது பண்டிகைக்குக்கூட வாழ்த்து தெரிவிக்க முடியாத இடத்தில், உங்களுக்கு எந்தவிதமான மரியாதை கிடைக்கும் தி.மு.க-வில்?

  3. உங்களின் மதநம்பிக்கையை மதிக்காத கட்சியில், உங்களின் மற்ற சிந்தனைகளை மதிக்க இடம் இருக்குமோ?

  4. நீங்கள் மனமுருகி வீட்டில் கும்பிடும் கடவுள்களை, உங்களது தோழமை கழகங்கள் தெருவில் அசிங்கப்படுத்துகின்றனவே, அதனை வார்த்தைகளால் கண்டிக்கக்கூடவா உங்களிடம் வீரம் இல்லை?


தி.மு.க-வில் இருக்கும், உழைக்கும் இந்துக்கள் இதனை சிந்திக்க வேண்டும். தி.மு.க-விற்கு மட்டும் தான் வாக்களிப்பேன் என்று உறுதியாக இருக்கும் இந்துக்களுக்கு(தன்னை இந்து என்று நினைப்பவர்களுக்கு) சில கேள்விகள்:

  1. இந்து மதத்தை சற்றும் மதிக்காத திமுகவை தமிழக இந்துக்கள் எவ்வாறு சட்டசபைக்கு அனுப்புகிறார்கள்?

  2. உங்களது பண்டிகைகளைக்கூட மதிக்காத, மேடைப்போட்டு உங்களது ஆன்மீக சிந்தனைகளை கேலி செய்யும் தோழர்களை கொண்ட தி.மு.க உங்களை எவ்வாறு மதிக்கும் என்று எண்ணுகிறீர்கள்?

  3. இராமரை கேலி செய்தவர்களை அரியணையில் உட்கார வைத்துவிட்டு, விரதம் இருந்து என்ன பயன்?

  4. விநாயகர் சிலையை உடைத்தவர்களுக்கு மந்திரிசபையை கொடுத்துவிட்டு, விநாயகர் கோவிலில் தேங்காய்கள் உடைத்து என்ன பயன்?

  5. கடவுளை நம்புகிறீர்கள் என்றால், இதெல்லாம் அந்த கடவுளுக்கு நீங்கள் செய்யும் தீமைகள் அல்லவா?

  6. உங்களின் கடவுள்களை கிண்டல் செய்யவே ஓட்டு வோட்டு போடுவீர்களா?

  7. இது என்ன ஸ்டோக்ஹோல்ம் சிண்டிரோமா? (ஸ்டோக்ஹோல்ம் சிண்டிரோம் என்பது தனக்கு தீமை செய்பவர்களையும் விரும்பும் மனநிலை. தமிழக இந்துக்களுக்கு இது பொருந்துமா என்று, அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.)


இதனை படிக்கும் நீங்கள், உங்களுக்கு தெரிந்த இந்து மத்ததை உண்மையாக பின்பற்றும் தி.மு.க உடன்பிறப்புகள் மற்றும் விசுவாசிகளிடம் இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கேள்விகளை கேளுங்கள். ஒருவேளை, இதனை படிக்கும் நீங்களே ஓர் உடன்பிறப்பு என்றால், உங்கள் மனதிடம் இந்த கேள்விகளை கேளுங்கள்.

Similar News