பா.ஜ.க அரசு 1.30 கோடி மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது: காங்கிரஸ் அரசு உறவினர்களுக்கு லண்டனில் வீடு கட்டி கொடுத்துள்ளது - வெளுத்து வாங்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி!

பா.ஜ.க அரசு 1.30 கோடி மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது: காங்கிரஸ் அரசு உறவினர்களுக்கு லண்டனில் வீடு கட்டி கொடுத்துள்ளது - வெளுத்து வாங்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி!

Update: 2019-02-16 08:28 GMT

பிரதமர் மோடியை பார்த்து, எதிர்க்கட்சிகள் பயந்து, மெகா கூட்டணி அமைத்துள்ளன என்றும், பா.ஜ.க அரசு 1.30 கோடி மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது என்றும், ஆனால் காங்கிரசஸ் அரசில் தனது உறவினர்களுக்கு இலண்டனில் வீடு கட்டி கொடுத்துள்ளதாக விழுப்புரம் கூட்டத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இராணி பேசினார்.


பா.ஜ.க சார்பில், கடலூர், சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட மகா சக்தி கேந்திர சம்மேளன கூட்டம், விழுப்புரத்தில் நேற்று நடந்தது. இதில், ஸ்மிருதி இராணி பேசியதாவது: "கடந்த நான்கரை ஆண்டுகளில், மத்திய அரசு, 1.30 கோடி மக்களுக்கு வீடுகளையும், 9 கோடி கழிப்பறைகளையும், ஏழை மக்களுக்கு கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி, அவர்களின் உறவினர்களுக்கு லண்டனில் வீடு கட்டி கொடுத்துள்ளது.


சக்தி கேந்திரர்கள், பூத் ஏஜன்ட்டுகள் ஒவ்வொரு விவசாய குடும்பத்தினரிடமும் சென்று, நம் சாதனையைக் கூறுங்கள். ஒரு நிமிடத்தைக் கூட சோம்பேறித்தனமாக செலவழிக்கக் கூடாது.  கட்சிக்காகவும், தேர்தலுக்காகவும் செலவழித்து, புதிய இந்தியாவை உருவாக்கி, மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.எதிர்க்கட்சிகள் மோடி, மோடி என பேச காரணம், நான்கரை ஆண்டுகளில் கறுப்பு பணம், பினாமி சொத்து வைத்திருந்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.


அதுமட்டுமின்றி, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரித்து, செயல்பட்ட இடைத்தரகர்களை கண்டறிந்து, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது, மோடி அரசு. மோடியை பார்த்து, பயந்து போய், எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து செயல்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.


Similar News