மியான்மரில் சமூக வலைதளங்கள் முடக்கம்: ட்விட்டர் நிறுவனம் கண்டனம்.!
மியான்மரில் சமூக வலைதளங்கள் முடக்கம்: ட்விட்டர் நிறுவனம் கண்டனம்.!;
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் அந்நாட்டில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்பதால் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.
ஆங் சான் சூகி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியை பிடித்தது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மீண்டும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் அந்நாட்டில் பொதுமக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் சமூக வலைதளம் மற்றும் அரசு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ட்விட்டர் சேவையையும் தற்போது மியான்மர் ராணுவம் முடக்கியுள்ளது. இதற்கு ட்விட்டர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.