நாச்சியார்கோவில் கோபாலன் படுகொலை : ஸ்ரீ சத்யாத்ம தீர்த்த ஸ்வாமிகள் கடும் கண்டனம்.!

நாச்சியார்கோவில் கோபாலன் படுகொலை : ஸ்ரீ சத்யாத்ம தீர்த்த ஸ்வாமிகள் கடும் கண்டனம்.!

Update: 2020-07-05 04:24 GMT

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் 68 வயதான கோபாலன் என்பவர் ஜூன் 30-ஆம் தேதி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். ஓய்வுபெற்ற ஆசிரியரான கோபாலன் ஸ்ரீ உத்தராதி மடத்தின் மேலாளராக இருந்து வந்துள்ளார். இவரது மகன் வாசுதேவன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து வருகிறார். ஸ்ரீ உத்தராதி மடத்திற்கு சொந்தமான 13 கடைகள் நாச்சியார்கோவிலில் உள்ளது. இதில் பா.ஜ.க நகரத் தலைவரான முருகன் என்பவர் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார்.

இந்த கடை சம்மந்தப்பட்ட பிரச்சனை காரணமாக கோவத்தில் இருந்த முருகன், ஜூன் 30 ஆம் தேதி இரவு 9 மணியளவில், குடி போதையில் கோபாலனை கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கோபாலன் சரிந்து விழுந்தார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே கோபாலனின் உயிர் பிரிந்தது. இதனை அடுத்து, நகர காவல்துறை முருகனை கைது செய்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீ உத்தராதி மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ சத்யாத்ம தீர்த்த ஸ்வாமிகள், இந்த படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டனத்தில், "சமீபத்தில் கும்பகோணம் நாச்சியார் கோவிலில் எமது மடத்தின் ஆத்மீய சீடரும் ஸ்ரீ உத்தராதி மடத்தின் சேவையை விசேஷமாக செய்தவருமான திரு. கோபால் அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அனைத்து ப்ராமணர்களின் சார்பாக நாங்கள் இதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டின் மூலை மூலைகளில் அனேக கோவில்கள் உள்ளன. மடம் ஆலயங்கள் உள்ளன.


அனைத்து ஆஸ்தீக பெருமக்களுக்கும் ஆன்மீக மையங்களாக அவை விளங்குகின்றன. அங்கு பணியாற்றி வருகின்ற அனைவருக்கும் அரசாங்கம் சரியான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இதன் மூலமாக வலியுறுத்திக் கோருகிறோம். இதற்காக நடந்து வரும் போராட்டத்திற்கு எங்களுடைய முழு ஆதரவை அளித்து, மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் அரசாங்கம் எச்சரிக்கை வகித்து ப்ராமணர்களின் பாதுகாப்பிற்கு முன் வர வேண்டும் என வலியுறுத்திக் கோருகிறோம்.", என்று கூறியுள்ளார். 

Similar News