கருணாநிதியால் சங்கடமான ஸ்டாலின் ! பதம் பார்த்த நெட்டிசன்கள்!
கருணாநிதியால் சங்கடமான ஸ்டாலின் ! பதம் பார்த்த நெட்டிசன்கள்!;
தி.மு.க தலைவர் திருமண விழாவில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என பேசியது அனைவரிடமும் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் அவர்கள் குடும்பத்தில் யாருக்கு தமிழில் பெயர் வைத்துள்ளார்கள் அடுத்தவர்க்கு அறிவுரை வழங்குகிறார் என நெட்டிசன்கள் ஸ்டாலினை பதம் பார்த்து வருகின்றனர்,
ஸ்டாலின் ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது , ஸ்டாலின் என்ற தனது பெயரால் எனக்கு சங்கடங்கள் ஏற்பட்டதாகவும் அதற்காக நான் வருத்தப்பட்டுள்ளேன் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். கலைஞர் ஆசையாக வைத்த பெயர் இதனால் நான் பெருமைப்படுகிறேன் என முதலில் கூறி வந்தார் ஸ்டாலின் தற்போது இவ்வாறு கூறியிருப்பது கலைஞரால் சங்கடப்பட்டேன் என சொல்ல வருகிறாரா?
தி.மு.க-வின் போஸ்டர்களில் கூட கலைஞர் படம் இல்லாமல் சமீப காலத்தில் ஒட்டப்பட்டு வருகிறது கலைஞர் என்ற பிம்பத்தை மறைக்க வேலை நடக்கிறது என திமுகவின் மூத்த உறுப்பினர்கள் கவலை அடைந்துள்ளனர்
அதே போல் ஸ்டாலின் குடும்பங்கள் நடத்தும் கம்பனிகளுக்கு எல்லாம் ஆங்கிலம் சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பாராம் இவர் அடுத்தவனுக்கு அறிவுரை சொல்வாராம் என்ன கொடுமை சார் இது
மு.க.ஸ்டாலினின் இந்த அறிவுரை சமூகத் தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது . டிவிட்டர் பதிவுகளில் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பங்களின் பெயர்களை வைத்து கலாய்த்து வருகின்ன்றனர்.