தாமதமாய் வெளியானதை, தமிழ் தவிர்க்கப்பட்டதாக பொய் செய்தி பரப்பிய ஊடகங்கள் : இன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தாமதமாய் வெளியானதை, தமிழ் தவிர்க்கப்பட்டதாக பொய் செய்தி பரப்பிய ஊடகங்கள் : இன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Update: 2019-07-18 08:01 GMT

உச்ச நீதிமன்றத்தில் புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இதில் உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டன. இதன் நகல்களை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பெற்றுக்கொண்டார். இது குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்த அவர், மொழி பெயர்க்கப்பட்ட 100 முக்கியமான வழக்குகளின் தீர்ப்பை பெற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக கூறியுள்ளார்.


இதனிடையே, தமிழில் தீர்ப்புகள் மொழி பெயர்க்கப்படவில்லை என்று கூறி தமிழ் ஊடகங்கள் சர்ச்சையை கிளப்பி வந்தன. இந்த நிலையில், தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளில் 113 வழக்குகளின் தீர்ப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்ற இணையதளத்தில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தீர்ப்புகள் வெளியாகி இருப்பது தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக கூறிய போலி செய்திகளுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்திருக்கிறது.




Similar News