அயோத்தி ராமர் கோவில்: 500 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறும் சபதம்! ராமர் கோவில் கட்டும் வரை தலைப்பாகை அணிய மாட்டோம் என்று சபதம் எடுத்த சூரியவம்ச க்ஷத்ரியர்கள்!

அயோத்தி ராமர் கோவில்: 500 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறும் சபதம்! ராமர் கோவில் கட்டும் வரை தலைப்பாகை அணிய மாட்டோம் என்று சபதம் எடுத்த சூரியவம்ச க்ஷத்ரியர்கள்!

Update: 2020-08-05 05:55 GMT

முகலாயர்களால் அயோத்தியில் இராமர் கோவில் இடிக்கப்பட்டு அதன் மீது பாபர் மசூதி கட்டப்பட்டபோது மீண்டும் ராமர் கோவில் கட்டும் வரை தலைப்பாகையும் லெதர் காலணியும் அணியப் போவதில்லை என்று சூரியவம்ச க்ஷத்திரியர்கள் எடுத்துக் கொண்ட நீண்ட நாளைய சபதம்சபதம் தற்போது முடிவுக்கு வருகிறது. அயோத்தி மற்றும் அயோத்தியை சுற்றியுள்ள 105 கிராமங்களில் வாழ்ந்த சூரியவம்ச க்ஷத்ரிய இனத்தைச் சேர்ந்த முன்னோர்கள் எடுத்த இந்த சபதம், உச்சநீதிமன்றம் ராம் லல்லா விரஜ்மான் அமைப்புக்கு ஆதரவாக அயோத்தி ராமஜென்ம பூமி நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்ததுடன் ராமர் கோவில் கட்டுவதற்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியதால் அவர்களின் சந்ததியினரால் தற்போது முடித்து வைக்கப்படுகிறது.

பகவான் ராமரின் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் கருதும் சூரியவம்ச க்ஷத்ரிய மரபைச் சேர்ந்தவர்கள் அயோத்தி மற்றும் அயோத்திக்கு அருகிலுள்ள பஸ்தி மாவட்டத்தின் 105 கிராமங்களில் வசித்து வருகின்றனர். உச்சநீதிமன்றம் ராமஜென்ம பூமி வழக்கில் அளித்த தீர்ப்பு இவர்களை மகிழ்ச்சி அடையச் செய்து இவர்களது சபதத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இவர்கள் அனைவரும் தலைப்பாகை அணியாமல் தேவைப்படும் போது குடையை உபயோகிப்பது என்றும் காலணிகளை அணிவதில்லை என்றும் உறுதிபூண்டு அதை பின்பற்றியும் வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ராமர் கோவில் கட்டப்படுவதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டதால் இந்த கிராமங்களில் தலைப்பாகைகள் இல்லம் தோறும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் முன்னோர் பூண்ட உறுதியை காக்கும் வண்ணம் திருமணங்களில் கூட இவர்கள் தலைப்பாகை அணிந்ததில்லையாம். இவர்களது முன்னோர்கள் கூட காலணி அணிவதில்லை என்று உறுதி எடுத்ததால் மரப் பாதுகைகளை அணிந்தார்களாம்.

முன்னாள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி DP சிங்கின் கூற்றுப்படி 16ஆம் நூற்றாண்டில் முகலாயர்களிடமிருந்து ராமர் கோவிலை பாதுகாக்க தாகுர் கஜ் சிங் தலைமையில் போர் புரிந்த அவரது முன்னோர்கள் கடும் போராட்டத்திற்கு பின் தோற்று விட்டதாகவும் அந்த சமயத்தில் தான் மீண்டும் ராமர் கோவில் கட்டும் வரை தலைப்பாகையும் காலணியும் அணிவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.


நன்றி: The Organiser

Similar News