இனிப்புகள் வழங்கலாம்! ஆனால் கொண்டாட்டங்கள் கூடாது ! உத்தரபிரதேச போலீசார் முக்கிய அறிவிப்பு.!

இனிப்புகள் வழங்கலாம்! ஆனால் கொண்டாட்டங்கள் கூடாது ! உத்தரபிரதேச போலீசார் முக்கிய அறிவிப்பு.!

Update: 2019-11-08 05:56 GMT

கடந்த 490 ஆண்டுகளாக மொகலாயர் ஆட்சி நீதிமன்றங்களிலும், இடையில் ஆங்கில அரசு நீதி மன்றங்களிலும், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரம் பெற்றப்பின் இந்திய அரசின் நீதி மன்றங்களிலும் நடைபெற்று வந்த ராமஜென்ம பூமி தொடர்பான நில வழக்கு சமீபத்தில் நிறைவடைந்து இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது.



உணர்வு பூர்வமான அதே சமயம் பரபரப்பும், பதற்றமும் நிறைந்த இந்த தீர்ப்பை அனைவரும் மூச்சை அடக்கிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த முக்கிய நேரத்தில் நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய அரசும், மாநில அரசுகளும் முடுக்கி விட்டுள்ளன. அயோத்தியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது, உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில் உ.பி., மாநில தலைமை செயலாளர், டிஜிபி, மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை அழைத்து தலைமை நீதிபதி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அயோத்தியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்ட-ஒழுங்கு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தீர்ப்பு வெளியாகும் நாளில் இனிப்புக்கள் வழங்கலாம். ஆனால் கொண்டாட்டங்கள் நடத்தக் கூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கண்காணித்தும் வருகின்றனர்.


Similar News